scorecardresearch

வாணி ஜெயராம் மறைவு: ‘யாருமே சொல்லவில்லை’- சோகத்தில் உடைந்து பேசிய பி. சுசிலா

அவரும் நானும் கிட்டத்தட்ட 100 பாடல்களுக்கு மேல் இணைந்து பாடியுள்ளோம். மேடையில் இருக்கும்போது பேசவோ சிரிக்கவோ மாட்டார்.

வாணி ஜெயராம் மறைவு: ‘யாருமே சொல்லவில்லை’- சோகத்தில் உடைந்து பேசிய பி. சுசிலா

வாணி ஜெயராம் மறைவு குறித்து தன்னிடம் யாரும் சொல்லவில்லை என்று பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா வருத்தத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சினிமா தயாராகும் அத்தனை மொழிகளிலும் பாடல் பாடி தனது குரலால் பல ரசிகர்களை பெற்றவர் வாணி ஜெயராம். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாணி ஜெயராம் தனது வீட்டில் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து வாணி ஜெயராம் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த நிலையில் நேற்று போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே வாணி ஜெயராம் மறைவுக்கு தன்க்கு யாரும் சொல்லவில்லை என்று பிரபல பின்னணி பாடகியும், வாணி ஜெயராமுடன் இணைந்து 100-க்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவருமான பி.சுசீலா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாணி ஜெயராம் மறைவு பற்றி என்னிடம் யாரும் சொல்லவில்லை. நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். அவரது மறைவு செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பு. அனைவரது உள்ளத்திலும் வாணி ஜெயராம் நிறைந்திருக்கிறார். அவரும் நானும் கிட்டத்தட்ட 100 பாடல்களுக்கு மேல் இணைந்து பாடியுள்ளோம். மேடையில் இருக்கும்போது பேசவோ சிரிக்கவோ மாட்டார்.

மிகவும் தெய்வ பக்தியும் தொழில் பக்தியும் அதிகம் உள்ளவர். நான், பாலசுப்பிரமணியம், ஜானகி ஆகியோர் இருக்கும்போது மட்டும் பேசி சிரிப்பார். அவர் பாடிய ஏழு ஸ்வரங்களுக்குள் இதுபோன்ற பாடல்களை யாரும் பாட முடியாது. அவருக்கு தனிப்பட்ட குரல் வளம் உள்ளது. இங்கு நிறைய போட்டிகள் இருந்தபோதும் அவர் தனித்தன்மையுடன் இருந்தார்.

அவரின் மறைவு கலைக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு. என்ற செயவது கடவுள் அவருக்கு காலம் முடிந்துவிடடது என்று அழைத்துக்கொண்டார். அவர் இந்நேரம் அவரது கணவரை சந்தித்திருப்பார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil singer p susila video about singer vani jayaram death