இந்தியாவின் பல மொழிகளில் பல்வேறு பாடல்கள் பாடி தனக்காக ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ள இசைக்குடியில் என்று பாராட்டப்படும் பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு தொடக்கத்தில் கல்லூரி விழாவில் ஒரு மறக்க முடியாத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்.
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, தனது 16 வயதில் கல்லூரி வழா ஒன்றில் பாடுவதற்காக சென்றுள்ளார். இது தான் அவர் மேடை ஏறிய முதல் நிகழ்வு. அதற்கு முன்பாக அவர் பாடல்கூட பாடியது இல்லை.
தனது 16-வயதில் மாமனாரோடு கல்லூரி விழாவுக்கு சென்ற எஸ்.ஜானகி, அங்கு பாடுவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளார். பள்ளிக்கூடம் பக்கமே போகாத எஸ்.ஜானகி, இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு கல்லூரி விழாவில் பாடுவதற்காக வந்துள்ளார். அவரின் வருகையை பார்த்த மாணவர்கள், எஸ்.ஜானகிக்கு எதிராக கூச்சலிட தொடங்கினர். கலாட்ட அதிகரித்தாலும் கவலைப்படமால் இருந்த எஸ்.ஜானகி பாடலை பாட தொடங்கியுள்ளார்.
அவரின் குரல் மேடையில் ஒலிக்க செய்தபோது, அவருக்கு எதிராக கூச்சலிட்டு கலாட்டா செய்த அத்தனை மாணவர்களும் அமைதியாகினர். பாடல் முடியும்வரை இந்த அமைதி நீடித்த நிலையில், பாடி முடித்தவுடன் அனைவரும் எஸ்.ஜானகிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கரகோஷங்களை எழுப்பியுள்ளனர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு. ஏ.வி.எம் நிறுவனத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு, எஸ்.ஜானகி மாமனார் ஒரு கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்திற்கு உடனாயடிக பதில் கிடைத்து, எஸ்.ஜானகி ஏ.வி.எம் நிறுவனத்தின் ஒப்பந்த பாடகராக மாறினார். ஆனாலும் அவரின் முதல் பாடல் ஏ.வி.எம். அல்லாத வெளிநிறுவனத்திற்கு பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“