டிவி ஸ்டேஷனில் தனது மகனுக்கு கோரஸ் பாட கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறி தள்ளிய பிரபல பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், அவருடன் கோரஸ் பாடப்போவது யார் என்பதை தெரிந்த பிறகு உடனடியான தனது மனதை மாற்றிக்கொண்டு மகனை பாட அனுப்பியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக இவர் பாடிய பக்தி பாடல்கள் தான் இன்றைய காலக்கட்டத்திலும் பல கோவில்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. முன்னணி நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் இனிமையான பாடல்களை கொடுத்த சீர்காழி கோவிந்தராஜன், தனது குரல் வளத்திற்காக பலராலும் அறியப்பட்டவர் என்ற சொல்லலாம்.
தன்னை போலபே தனது மகன் சிவ சிதம்பரத்தையும் பாடகராக மாற்றிய சீர்காழி கோவிந்தராஜன், ஆரம்பத்தில் தனது மகனை டிவி ஸ்டேஷனில் பாட வைத்துள்ளார். இவருக்கும் தமிழ் சினிமாவின் சிறந்த கதாசிரியர்களின் ஒருவராக எம்.எஸ்.பெருமாளுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. எம்.எஸ்.பெருமாள் அப்போது சென்னை டிவி ஸ்டேஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த எம்.எஸ்.பெருமாள், பாரதியாரின் பாடல்களை பாடுவதற்காக சில கலைஞர்களை தேர்வு செய்கிறார். இதில் யாமறிந்த மொழிகளிலே என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன் மகன் சிவசிதம்பரமும், நாடக உலகில் சிறந்து விளங்கிய டி.கே.சண்முகம் மகன் டி.கே.எஸ் கலைவாணனும் பாடுவதற்காக முடிவு செய்துள்ளார்.
Advertisment
Advertisements
பாடல் பதிவின்போது அனைவரும் வந்துவிட, சீர்காழி கோவிந்தராஜானின் மகன் சிவசிதம்பரம் வரவில்லை. 3 பாடல்கள் பதிவு முடிந்து 4-வது பாடலை பதிவு செய்த தயாரானபோது, சிவசிதம்பரம் வராத நிலையில், ஏன் வரவில்லை என்று எம்.எஸ்.பெருமாள் யோசித்துக்கொண்டிருக்க அப்போது அங்கே வருகிறார் சிவசிதம்பரம். இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதால் எம்.எஸ் பெருமாளை சித்தப்பா என்று தான் அழைப்பார் சிவ சிதம்பரம்.
அவர் வந்தவுடன் பாடல் பதிவு முடிந்துவிட, சிவசிதம்பத்தின் டிரைவர் வந்து எம்.எஸ்.பெருமாளிடம் வந்து நான் சிவ சிதம்பரத்தை அழைத்து செல்லலாமா என்ற கேட்க, பாடல் பதிவு முடிந்துவிட்டது. அழைத்து செல்லுங்கள் இதை என்னிடம் ஏன் கேட்க வேண்டும் என்று கேட்க, பாடல் பதிவு முடிந்தாலும உங்களிடம் அனுமதி பெற்றே அவரை அழைத்து செல்ல வேண்டும் என்று சீர்காழி கோவிந்தராஜன் கூறியிருக்கிறார் என்று கூறியுள்ளார் அந்த டிரைவர்.
இதை கேட்ட எம்.எஸ்.பெருமாள் ஏன் அப்படி என்று கேட்க, அவர் எதுவும் சொல்லாம் சென்றுவிடுகிறார். அன்று இரவு சென்னை டிவி ஸ்டேஷன் நிர்வாக இயக்குனர் முரளிதரன், எம்.எஸ்.பெருமாளிடம் தொலைபேசியில் பேசியபோது, மற்ற பாடகருடன் இணைந்து கோரஸ் பாட வேண்டும் என்பதால் சீர்காழி கோவிந்தராஜன் தனது மகனை பாட அனுமதிக்கவில்லை. ஆனால் அவருடன் இணைந்து பாடுவது டி.கே.எஸ்.கலைவாணன் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டு மகனை அனுப்பி வைத்தார்.
நான் இப்போது எனது மகனை பாட அனுப்பாமல் இருந்திருந்தால் டி.கே.சண்முகம் அண்ணாச்சி மகனுடன் தனது மகன் பாட சீர்காழி கோவந்தராஜன் மறுத்துவிட்டார் எனற அவப்பெயர் எனக்க வந்திருக்குமே. நல்ல வேளை அதில் இருந்து தப்பித்துவிட்டேன். டி.கே.எஸ் புகழுக்கு நாம் வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியது இருக்கு என்று கூறியுள்ளார் சீர்காழி கோவிந்தராஜன். இந்த தகவலை நெல்லை ஜெயந்தா தனது யூடியூப் செனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“