scorecardresearch

தந்தை மறைவுக்கு பின் முதல் முறை : விஜய் டி.வி ஷோவில் பாடல் பாடிய எஸ்.பி.பி. மகள்

சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகள் பல்லவி பலரும் அறியப்படாத பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.

தந்தை மறைவுக்கு பின் முதல் முறை : விஜய் டி.வி ஷோவில் பாடல் பாடிய எஸ்.பி.பி. மகள்

தென்னிந்திய திரையுலகில் தனது பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனமதில் நீங்காத இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். பாடகராக மட்டுமல்லாமல், நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என சினிமாவில் பல துறைகளில் தனது திறமையை நிரூபித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் மரணமடைந்தார்.

அவரது மரணம் தமிழ் திரையுலகில் பெரிய வெற்றிடத்தைஉருவாக்கியுள்ளது என்று சொல்லலாம். எஸ்.பி.பி.க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் எஸ்.பி.பி.சரண் திரையுலகில் பலரும் அறிந்த ஒருவராக உள்ளார். மேலும் தனது அப்பாவைபோல் சினிமாவில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் தொகுப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பலதுறைகளில் தடம் பதித்துள்ளார்.

தந்தை மகன் இருவரும் பெரிய அளவில் பிரபலமானவர்களாக இருக்கும் நிலையில், சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகள் பல்லவி பலரும் அறியப்படாத பிரபலங்களில் ஒருவராக உள்ளார். தனது அப்பாவை போலவே தமிழ் திரையுலகில் பல பாடல்களை பாடியுள்ள பல்லவி கடந்த சில வருடங்களாக பாடுவது இல்லை.

பாடல் பாடுவதில் அவ்வளவாக ஆர்வம் காடடாத எஸ்.பி.பி பல்லவி சில வருடங்களுக்கு பிறகு தனது அப்பாவின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக விஜய் டிவி ஷோவில் பாடல் பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. எஸ்.பி.பி சரண், எஸ்.பி.பி பல்லவி இருவரும் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், தொகுப்பாளர் பிரியங்கா மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் கேட்டுக்கொண்டதால் பாடல் பாடியுள்ளார்..  

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இசைமைத்த உன்னை சரணடைந்தேன் படத்தில் வரும் கண்ணா கலக்கமா என்ற பாடலை பல்லவி பாடியிருந்த நிலையில், தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் அந்த பாடலை பாடியுள்ளார். இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil singer spb daughter pallavi singing in vijay tv super singer show