Advertisment

பயில்வான் ஒரு ஆபாச பட ஏஜெண்ட் : ஒதுக்கப்பட்டவர் ; பாடகி சுசித்ரா அதிரடி

நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் பயில்வான் ரங்கநாதன், ஒரு ஆபாச பட ஏஜெண்டாக இருந்தவர் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Bayilwan and Suchithra

பயில்வான் ரங்கநாதன் - பாடகி சுசித்ரா

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நடிகைளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா, தற்போது பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் குறித்து வெளியிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். செந்தில் கவுண்டமணியுடன் இவர் நடித்த பல காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் 80-90களில் இருந்த முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள பயில்வான் ரங்கநாதன், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

அதே சமயம், பத்திரிக்கையாளராகவும், யூடியூப்பராகவும் இருக்கும் ரங்கநாதன், தமிழில் வெளியாகும் படங்கள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். மேலும் யூடியூப் வீடியோக்களில் நடிகைகள் குறித்து சர்ச்சையான பல விமர்சனங்களை கொடுத்து வருகிறார். இந்த விமர்சனங்கள் அந்த நடிகைகள் குறித்து சமூகவலைதளங்களில் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகி வருவது வழக்கமாகி வருகிறது.

இது குறித்து நடிகர் நடிகைகள் பலரும் அவருக்கு கண்டங்கள் தெரிவித்திருந்தாலும், பயில்வான் தொடர்ந்து தனது கருத்துக்களை கூறி வருகிறார். இது குறித்து கடந்த ஆண்டு பிரபல பின்னணி பாடகி சுசித்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார், அதே போல் பயில்வானிடம் சுசித்ரா போனில் சண்டை போட்ட ஆடியோ பதிவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் பேசிய பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதன் குறித்து பல தகவல்களை கூறியிருந்தார். அதில், பயில்வான் என்னை பற்றி பேச, 2 காரணங்கள் தான் உள்ளது. அதில், ஒன்று என்னை பற்றி பேச காசு வாங்கியிருப்பார். இல்லை என்றால் என்னை பற்றி தெரிந்திருக்க வேண்டும். நான் என் வாழ்நாளில் அவரை பார்த்ததில்லை. நான் பின்னணி பாடகியாக இருந்தபோது அவர் சினிமாவில் இருந்துள்ளார்.

நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன், அவர் ஆபாச படங்களுக்கு நடிகைகளை ஏற்பாடு செய்துகொடுக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். ஒரு காலத்தில் மலையாள ஆபாச படங்களின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. அதில் பயில்வான் வேலை பார்த்து வந்தார். நான் பத்திரிக்கையாளராக இருந்த காலத்தில் அனைவரும் அறிந்த ஒன்று.

ஆபாச பட கலாச்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தவதே பயில்வான் ரங்கநாதன் தான். பின்னர் இது தமிழகத்திற்கு செட் ஆகாது என்று சொல்லி, சரத்குமார், ராதாரவி, சத்யராஜ், கங்கை அமரன் ஆகியோர் தான் நிறுத்தினார்கள். அதனால் பயில்வான் ஒரு மாமா பையன். என்மேல் குற்றச்சாட்டு வைத்ததால் இதை நான் சொல்லவில்லை. பயில்வான் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை. விஷால் கூட அவரிடம் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பயில்வன் ஒதுக்கப்பட்டவர் ஒரு உதவாக்கரை என்று கூறியுள்ளார் சுசித்ரா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Singer Suchitra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment