சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செலிபிரேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. அதே சமயம் இந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பாடகி சுஜாதாவின் பிறந்த நாள் கொண்டாட்டமும் நடைபெற உள்ளதால் அவரின் கணவர் மற்றும் மகள் ஸ்வேதா மோகன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகி சுஜாதா. 1977-ம் ஆண்டு வெளியாக கவிக்குயில் என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஏரளமான மொழிகளில் 2000-க்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும் இளையராஜா, ஏ.ஆர்,ரஹ்மான், சிற்பி, வித்தியாசாகர், தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
1963-ம் ஆண்டு பிறந்த சுஜாதாவுக்கு 1981-ம் ஆண்டு மோகன் என்ற மருத்துவருடன் திருமணம் நடைபெற்றது. சுஜாதாவின் அப்பா இறந்துவிட்டாதால், 18 வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 1985-ம் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளார். அவர் தான் தற்போது பிரபல பாடகியாக இருக்கும் ஸ்வேதா மோகன். சுஜாதா தனது பெற்றோருக்கு ஒரே மகளாக இருக்கும், சுதாவுக்கு ஸ்வேதா மோகன் ஒரே மகளாவார்.
ஸ்வேதா பிறந்தபோது, சுஜாதாவுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்ததால், தனது மகள் ஸ்வேதாவை சரியாக கவனிக்க முடியாமல் போயுள்ளது. அதனை ஈடுகட்டும் வகையில் தற்போது ஸ்வேதாவின் மகளை சுஜாதா கவனித்து வருகிறார். அதேபோல் சீரியல் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் சுஜாதா, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், மற்றும் ஜீ தமிழின் சரிகம உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இதனிடையெ சுஜாதா மோகன் தனது கணவர் மோகன் மற்றும் மகள் ஸ்வேதா ஆகியோருடன் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளார். பாடகர் எஸ்.பி.பியின் செலிபிரேஷன் ரவுண்டில் சுஜாதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் அரங்கேற உள்ள நிலையில், ஸ்வேதா மோகன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“