சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏ,ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இதற்கு நடுவில் பிரபல பாடகி வெளியிட்ட பாலியல் சீண்டர் தொடர்பான ட்விட்டர் பதிவு மக்கள் மத்தியில் சரியான ரீச் இல்லாமல் போய்விட்டது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆா.ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் சென்னையில் உள்ள ஆதித்யாராம் அரண்மனையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பலரும் அமர இடமில்லாமல், டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாமல் திரும்பி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது பலரும் பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோல் அவருக்கு ஆதரவாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பதிவில், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில், பாடகியாக பங்கேற்ற பிரபல பின்னணி பாடலி ஸ்வேதா மோகன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவுடன் வெளியிட்டுள்ளார். ஆனால் இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சை அதிகரித்தாதல் இந்த ட்விட்டர் பதிவும் அதிக பார்வையாளர்களை சென்றடையவில்லை.
ஸ்வேதா மோகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் இதயத்தில் இவ்வளவு பாரம் இருந்ததால் இதை சொல்கிறேன். இன்று எனக்கு இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை கச்சேரிக்குப் பிறகு என்னைப் பிடித்தவர்களில் ஒருவர், நான் அவரிடம் வழி கேட்டபோது என் கண்களைப் பார்த்தார். அப்போது நான் சோர்வடைந்து இருந்தேன் அப்போது அந்த நபர் என்னை பாலியல் ரீதியாக தொட்டார் என்று ஒருவரின் கைகள் நடுங்கும் வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பாலியல் சீண்டல் குறித்து ஏற்கனவே பதிவிட்ட ஒரு பெண்ணுடன் ஒற்றுமையை பகிரும் வகையில், என் இதயம் உன்னிடம் செல்கிறது என்று ஸ்வேதா மோகன் பதிவிட்டிருந்தார். "இந்த ட்வீட்டை புறக்கணிக்க முடியவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அமைதி, அன்பு மற்றும் மனிதநேயத்திற்காக நின்ற ஒரு ஐகானுக்கு, இசை எப்போதும் தளர்த்தப்பட்ட அவரது கச்சேரியில் இது நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கலந்துகொண்ட அனைவருக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளது.
“ஏ.ஆர்.ஆர் தனது கச்சேரியில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் போன்ற குற்றவாளிகளுக்கு தகுதியானவரா? அவர் சிறந்தவர், சிறந்தவர். ஒவ்வொரு கச்சேரியிலும், ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் எடுத்துச் செல்ல வேண்டிய மரியாதையை நினைவூட்டுவதற்காக அவர் ஒரு பாடலை குறிப்பாக பெண்களுக்கு அர்ப்பணித்தார். ஆனால் நாம் ஒரு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம். என் இதயம் உன்னிடம் செல்கிறது. இதை முறியடித்து மீண்டும் எழுச்சி பெற உங்களுக்கு ஆற்றலை அனுப்புகிறது! உனக்காக நீயே என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்வேதா மோகன் பதிவுக்கு எதிர்வினை
அவரது இடுகைக்கு பதிலளித்து, ஒரு பயனர் கூறுகையில், “அவர் இதை சிங்கப்பூர், மலேசியாவில் செய்தார், இப்போது அவர் அதை இங்கே செய்கிறார்! நீங்கள் மக்களுக்காக நிற்கவில்லை. நீங்கள் கோமாளிகள். அவரது இமேஜை காப்பாற்றாமல், பொறுப்புணர்வையும் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், "அப்படியானால், உங்கள் ஏ.ஆர்.ஆர் மன்னிப்பு கேட்டு டிக்கெட்டுகளைத் திரும்பப்பெறச் சொல்லுங்கள், இது மிகவும் எளிது" என்று மற்றொருவர் கூறினார்.
இசை நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏ.ஆர்,ரஹ்மான், அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை arr4chennai@btos.in உடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் குறைகளை. எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“