தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர், எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில், அந்த நடிகரே பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்த்தில் பாடும் திறன் பெற்றவர்.
அதேபோல் பாடல்களில் தனது தனித்திறமையின் மூலம் ஒருசில மாற்றங்களை செய்து அதில் வெற்றியும் கண்ட டி.எம்.சௌந்திரராஜன், தனது இளம் வயதில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். 23 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான டி.எம்.எஸ், குடும்ப வறுமை காரணமாக பி.யூ.சின்னப்பா நடிப்பில் சுதர்சன் என்ற படத்தை தயாரித்துக்கொண்டிருந்த ராயல் டாக்கீஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு ஒருமுறை பி.யூ.சின்னப்பா தனது சக நடிகர்களுடன் சீட்டு விளையாடிக்கொண்டிருக்க, அருகில், டி.எம்.எஸ். பாடல் பாடிக்கொண்டிருந்தார். இதை கேட்ட சின்னப்பா நண்பர்கள் இவன் எதற்காக இப்படி கத்திக்கொண்டிருக்கிறான் என்று கேட்க, அவன் என் பாடலை பாடிக்கொண்டிருக்கிறான். ஒரு நாள் பெரிய ஆளா வருவான் பார் என்று பி.யூ.சின்னப்பா கூறியுள்ளார். அதன்படி பல தடைகளை தாண்டி பாடகராக மாறிய டி.எம்.எஸ்.தனது குரலின் மூலம் பல நடிகர்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளார்.
அதேபோல் தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் கொண்டிருந்த டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கி சிறிய நடிகர்கள் வரை பலருக்கும் அவர்களை போலவே பாடல் பாடியுள்ள டி.எம்.எஸ் எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு பாடுவது தான் கஷ்டம் என்று கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆருக்கு பாடுவது கஷ்டமா அல்லது சிவாஜிக்கு பாடுவது கஷ்டமா என்று கேட்டபோது, பதில் அளித்த டி.எம்.எஸ் சிவாஜிக்கு பாடுவது தான் கஷ்டம். எம்.ஜி.ஆருக்கு பாடுவது சாதாரணமாக பாடினால் போதும். ஆனால் சிவாஜிக்கு பாடும்போது அடிவயிற்றில் இருந்து பாட வேண்டும். அவர் பேசும்போதே அப்படித்தான் பேசுவார் அதனால் அவருக்கு பாடுவது தான் கஷ்டம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil