தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர், தனது மார்க்கெட் சரிந்தது எங்கே என்பது குறித்து ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார்.
1980-ம் ஆண்டு தமிழில் வெளியான படம் ஒரு தலை ராகம். டி.ராஜேந்தர் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தில், சங்கர், தியாகு, சந்திரசேகர், உஷா ராஜேந்தர் உள்ளிட்டர் பலர் நடித்திருந்தனர். காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாடல்களும், சிறப்பான வரவேற்பை பெற்று பாராட்டுக்களையும் பெற்றது.
இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய, டி.ராஜேந்தர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். இதில் வரும் அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில். குறிப்பாக நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரம் ஆகிய இரு பாடல்களும், இன்றும் ஒரு சிறப்பான பாடல் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த இரு பாடல்களையும் டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.
இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், நான் ஒரு ரசியில்லா ராஜானு முதல் பாடல், என் பேர் சௌந்திரராஜன், நானே ராசியில்லா ராஜானு என் வாயால எப்படியா பாட முடியும் என்று நான் டி.ராஜேந்தரிடம் சொன்னேன். சார் இந்த பாடலை படத்தில் கதாநாயகன் பாடுகிறார் சார் என்று என்னை சமாதானப்படுத்தி பாட வைத்தார். அடுத்த பாட்டுதான் பெரிய திருப்பம். என் கதை முடியும் நேரம் என்று நானே பாடினேன்.
இந்த பாடல்களை பாடியதால் தான் என் மார்க்கெட் போய்விட்டது என்று சொல்ல மாட்டேன். அதன்பிறகு வந்த புதுப்பாடல்களால் தான் சௌந்தர்ராஜன பாடிய பாட்டோட அருமை தெரிகிறது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil