உலக புகழ்பெற்ற இந்தியாவின் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுல பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரைப்பற்றிய கட்டுரைகளை பல இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியாகி வருகிறது.
ஆனால் எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்ட ஒருவரைப் பற்றி என்ன எழுதுவது? ஒவ்வொரு சிறிய விவரத்தையும் காரணியாகக் கொண்டு, அவரது தொழில் பற்றி விவாதிக்கப்பட்ட ஒரு நபரைப் பற்றி புதிதாக என்ன ஆராய்வது? அவரைப் பற்றிய அறியப்படாத உண்மைகள் அனைத்தும் பொதுவான அறிவாகிவிட்டால் என்ன செய்வது? ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஏற்கனவே சொல்லாததை வேறு என்ன சொல்ல முடியும்? என கேள்விகள் உள்ளது.
அமைதியான சகாப்தத்தை வரையறுக்கும் இசைக்கலைஞர் அமைதியாக தனது சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்து வருகிறார். அவரது 56 வது பிறந்தநாளில், சீதா ராமம் மற்றும் ஜில் ஜங் ஜக் போன்ற அற்புதமான ஆல்பங்களின் இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகருடன் உரையாடலில் சில புதிய பரிமாணங்களை தெரிந்துகொண்டோம். இவர் ஏஆர் ரஹ்மானின் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரியின் மாணவர்.
2008-ம் ஆண்டு நிறுவப்பட்ட கன்சர்வேட்டரியின் ஒரு பகுதியாக இருந்துள்ளர்ர். ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவராக ஆவதற்கு முன்பே, விஷால் பாடல்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார். ஆனால் இசையைப் புரிந்துகொள்வதற்காக ஓராண்டு படிப்பில் சேர்ந்தார். “ஏஆர் ரஹ்மான் என்னுடைய முதல்வர். இசைக் கோட்பாடு மற்றும் அனைத்தின் அடிப்படையில் சிறந்த சூழலையும் ஆசிரியர்களையும் வழங்கியவர். கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி என்பது பலதரப்பட்ட திறன்களைக் கொண்ட மாணவர்களைக் கண்டறியும் ஒரு வகையான இடமாகும்.
நான் இசையமைத்துக்கொண்டிருந்தாலும், அங்கு ஒரு மாணவனாக இருந்ததால், நான் இன்னும் சிறப்பானவனாக மாற உதவியது. ரஹ்மானிடம் தனது ஆராய்ச்சிப் பணியை செய்தது வாழ்வின் உயரிய புள்ளிகளில் ஒன்று என்று விஷால் கூறியுள்ளார். "இது நான் கேஎம் (KM) பட்டம் பெற்ற பிறகு எனது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரஹ்மான் எவ்வளவு அற்புதமாக பாடத்திட்டத்தை கட்டமைத்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன், ஏனென்றால் அதுவரை நான் என்ன செய்துகொண்டிருந்தேன் எடின்பதை தெரிந்துகொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இரவு 11.50 மணிக்கு நான் என்ன செய்தேன் என்று அவருக்கு மெயில் அனுப்பியபோது, அவர் இரவு 11.55 மணிக்கு... அதாவது ஐந்து நிமிடங்களுக்குள் ‘நன்றாக இருக்கிறது’ என்று பதிலளித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது செயல் தனித்து நின்றது,
ஏனென்றால் இவை அனைத்தும் சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் அவரது வழி என்று கூறியுள்ள விஷால் அன்புடன் பாராட்டி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் கன்சர்வேட்டரி எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசிய விஷால், இது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. உதாரணமாக, நான் நிறைய வயலின் பிளேயர்களுடன் பதிவு செய்கிறேன். மேலும் இவர்கள் அனைவருமே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். இசையமைப்பாளர்களாகிய நாம், புதிய தலைமுறை மெல்ல அழிந்து வருவதை உணர்ந்துள்ளோம்.
இவர் கே.எம் உடன் நல்ல இசையறிவு உள்ள பல தாழ்த்தப்பட்ட மாணவர்களை வரவழைத்து இலவசமாக கற்பித்து வருகிறார். இது பலருக்கும் தெரியாது. நான் அங்கு இருந்ததால் எனக்குத் தெரியும். இதன் தாக்கத்தை இப்போது உணர மாட்டோம். ஆனால், பத்து வருடங்களுக்குப் பிறகு சொல்லுங்கள்... அதை உணர்ந்து கொள்வோம். மாசிடோனியம் அல்லது புடாபெஸ்ட் ஆர்கெஸ்ட்ரா போன்ற சர்வதேச இசைக்குழுக்களுக்கு போட்டி போடக்கூடிய இசைக்குழுவை அவர் உருவாக்குகிறார்.
புடாபெஸ்டிலும், சென்னையிலும் சீதா ராமனுக்காக பதிவு செய்த அனுபவம் எனக்கு உண்டு. நமக்கும் அவர்களுக்கும் இசையைப் புரிந்து கொள்வதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ரஹ்மான் இந்திய இசைக்கு மட்டுமல்ல, மேற்கத்திய இசைக்கும் நன்கு பொருந்திய புதிய திறமைகளை உருவாக்குவதன் மூலம் அந்த இடைவெளியைக் குறைக்கிறார். அவர் ஏற்கனவே இங்கு இசைக்கலைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார், மேலும் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அவர் இத்தனை ஆண்டுகளாகச் செய்ததை நீங்கள் இன்னும் நிறைய பார்க்கலாம்.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் ஒரு பரந்த கடல் போன்றவர்கள் என்று சொல்கிறோம், ஆனால் எனது ஆராய்ச்சி மற்றும் பணி அனுபவத்திற்குப் பிறகு அவர்கள் கடல் போன்றவர்கள். அவர்களின் இசையில் எங்களுக்குத் தெரிந்ததை விட இன்னும் நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.