தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவரது தோழியும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையுமான ஹெமா சௌத்ரி பேசியுயள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த், இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த், 1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். தற்போது இவர் பிரபலமான நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தனது வாழ்வில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். இதை ரஜினியே பல மேடைகளில் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
அதேபோல் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியுடன் பயணித்த பலரும் அவரைப்பற்றி கூறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினியை பற்றி அவருடன் ஃபிலிம் இஸ்ன்ட்யூட்டில் ஒன்றாக படித்த நடிகை ஹேமா சௌத்ரி கூறியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் ஃபிலிம் இஸ்ன்ட்யூட்டில் நாங்கள் சேரும்போது ரஜினிகாந்த் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். ஒருமுறை ஃபிலிம் இஸ்ன்ட்யூட்டில் எங்களுக்கு நடிக்க சொல்லி டெஸ்ட் வைத்தார்கள். அப்போது எனது அம்மா என்னுடன் வந்திருந்தார். ஃபிலிம் இஸ்ன்ட்யூட்டில் இருந்த அனைவரும் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர்.
அப்போது எனது அம்மா ஒருவரை பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் யார் என்று என்னிடம் கேட்டார். எனக்கு முதல் நாள் என்பதால் தெரியாது என்று சொன்னேன். அப்போது எனது அம்மா அவரை அழைத்து விசாரித்தார். அப்போது அவர் தனது பெயரை சிவாஜி ராவ் என்று கூறினார். அவர் தான் தற்போது ரஜினிகாந்த்.
அப்போது எனது அம்மா மிகப்பெரிய நடிகரிக் பெயரை வைத்திருக்கிறாய். நிச்சயமாக பெரிய ஆளாக வருவாய் என்று சொன்னார். உடனே எனது அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதன்பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக பழக தொடங்கினோம். ஆனால் அப்போதும் கூட பல நாட்களில் அவர் தனியாகதான் இருப்பார் அவர் ஒரு தனிமை விரும்பி.
தற்போது அவர் படங்களில் காட்டும் ஸ்டைல் அப்போதிருந்தே அவரிடம் உள்ளது. ஃபிலிம் இஸ்ன்ட்யூட்டில் படிக்குபோதே சிகரெட்டை வாயில் தூக்கிபோட்டு பிடித்துள்ளார். இது போன்ற ஸ்டைல் அவர் கூடவே பிறந்தது. அதன்பிறகு 1976-ம் ஆண்டு நான் நாயகியாக ஒரே நேரத்தில் 4 மொழிகளிலும் புக் ஆகிவிட்டேன். இந்த படத்தின் ப்ரீமியர் ஷோ வெளியான போது எனது அம்மா படம் எப்படி இருக்கிறது என்று ரஜினிகாந்திடம் கேட்டார்.
நன்றாக இருக்கிறது என்று சொன்ன ரஜினிகாந்த், உங்கள் மகள் நாயகி ஆகிவிட்டார். ஆனால் நான்தான் வாய்ப்புக்காக தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து ஒருநாள் இரவு 11 மணியளவில் ரஜினிகாந்துடன் ஃபிலிம் இஸ்ன்ட்யூட்டில் படித்த பலரும் திடீரென வீட்டுக்கு வந்தார்கள். அப்போதுதான் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். அதை கேட்டு அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
அதன்பிறகு பல படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆனாலும் ஃபிலிம் இஸ்ன்ட்யூட்டில் எப்படி இருந்தாரே அதே குணம் இன்னும் அவரிடம் உள்ளது கொஞ்சம் கூட தலைகணம் இல்லாமல் பெண்களை மதிக்கும் குணம் உள்ளவர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார். அவரின் பேட்டி தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“