தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா முதல் முறையாக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிற்கு வந்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக தமிழில் கனெக்ட் என்ற ஹாரார் படம் வெளியானர். அதேபோல் மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் கோல்ட் படமும் தெலுங்கில் காட்ஃபாதர் படமும் வெளியானது.
தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ளார். ஜவான் படம் வரும் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், நயன்தாரா இன்று (ஆகஸ்ட் 31) சமூகவலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். நயன்தாராவின் இந்த என்டரி அவரது ரசிகர்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விருந்து என்று சொல்லலாம்.
இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவியுள்ள நிலையில், முதல் வீடியோவாக ஜெயிலர் படத்தின் டைகர் தீமுடன் தனது இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு நயன்தாரா என்டரி ஆகிறார். இந்த பதிவுக்கு நான் வந்துட்டேனு சொல்லு என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஒருவர், குயின் என்டரி என்றும் மற்றொருவர் "வெல்கம் தங்கமே" என்றும் கூறியுள்ளனர்.
மேலும் "இவ்வளவு நாள் காத்திருந்தோம், இறுதியாக உர் ஹியர் லவ் யூ நயன் டார்லிங்" என்று நயன்தாராவின் ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நயன்தாரா தற்போது சமூக வலைதளங்களில் அறிமுகமாகிவிட்டதால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் பிரத்யேகப் பார்வைகளுக்காக கனவுகளின் கவர்ச்சி மற்றும் மினுமினுப்பைத் தாண்டி நயன்தாரா ரசிகர்களுக்கு நிச்சயமாக அவரைப் வேறு கோணத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர் தனது முதல் இன்ஸ்டாகிராம் இடுகையில் ஹைலைட், அவர் தனது குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முகங்களை முதல் முறையாக ஒரு வீடியோ மூலம் வெளிப்படுத்துகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“