/tamil-ie/media/media_files/uploads/2023/06/Viijay.jpg)
நடிகர் விஜய் - மாணவி நேரத்ரா
சமீபத்தில் நடிகர் விஜய் மாணவர்களை சந்தித்த நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் தரவரிசை பட்டியலி் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கிய தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் விஜய் அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் தொடர்பான நகர்வுகளையும் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இந்த நிகழ்ச்சி விஜயின் அரசியல் நகர்வின் முதல் படி என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு பொறியியல் கல்லூரி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்திருந்த மாணவி நேத்ரா, மக்கள் இயக்க நிர்வாகிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்காக கடந்த மே மாதம் விண்ணப்பிக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்காக விண்ணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 102 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நேத்ரா முதலிடத்தையும், ஹர்ணிகா என்ற மாணவி 2-வது இடத்தையும், ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி பொறியியல் தரவரிசையில் முதலிடம் பிடித்தது தமிழகத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.