தமிழ் சின்னத்திரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ள நிலையில், அடுத்து ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலின் ப்ரமோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்களின் இன்றியமையான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்கள் முடிவக்கு வருவதும் தொடந்து வருகிறது. குறிப்பாக சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருவதால், இதில் வரும் பல சீரியல்களில் 4 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியல் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தால் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பதும், அதுவே சலிப்படையும் வகையில் இருந்தால், கடுமையாக விமர்சிப்பதும் அவ்வப்போது நடைபெறும். அந்த வகையில் நாயகி இறந்தவுடன் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அன்பே வா சீரியல் அதன்பிறபு புது நாயகியை அறிமுகம் செய்து கதையை திசைதிருப்பி வந்தனர். ஆனால் இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில், ஒரு வழியாக அன்பே வா தற்போது முடிவுக்கு வர உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்பே வா சீரியல், கடந்த ஜனவரி மாதம் 1000 எபிசோடுகளை கடந்தது. விராட், டெல்னா டேவிஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாயகி டெல்னா டேவிஸ் இறந்துவிடுவது போல் கட்சிகள் இருந்தது. இதனால் சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே சமயம் புதிய நாயகியை அறிமுகம் செய்த சீரியல் குழுவினர் கதையை திசை திருப்பினர். அதே சமயம் மகாலட்சுமியின் வில்லத்தனம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க தொடங்கியது. இதனிடையே தற்போது அன்பே வா சீரியலை முடிவுக்கும் முடிவுக்கு சீரியல் குழுவினர் வந்துவிட்டதாகவும், சீரியலின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே அன்பே வா சீரியல் முடிவுக்கு வர உள்ளதால், அடுத்து புதிய சீரியலாக மல்லி என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழின் பேரன்பு, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகர் விஜய் வெங்கடேஷன் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார். சூரியவம்சம் சீரியலில் நடித்த நிகிதா இந்த சீரியலில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“