Advertisment

சன் டி.வி சீரியலை பின்னுக்கு தள்ளிய சிறகடிக்க ஆசை : இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்

இந்த வருடத்தின் 50-வது வாரத்தில் தமிழ் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டி பட்டியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi Serial

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்கள் தற்போது ரசிகர்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதனால் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்களின் திரைக்கதையை மாற்றுவது போன்ற திருப்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனாலும் மக்கள் மத்தியில் சீரியல்கள் எவ்வாறு வரவேற்பை பெறுகின்றன என்பது சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் இந்த வருடத்தின் 50-வது வாரத்தில் தமிழ் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டி பட்டியல் குறித்து பார்ப்போம்.

தனது ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்தே முன்னணியில் இருந்து வரும் சன்டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் தவறாமல் இந்த வாரமும் 11.59 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சைத்ரா ரெட்டியின் அற்புதமான நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 11.55 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சுந்தரி பார்ட் 2 10.04 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

மாரிமுத்து இருந்தது வரை டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்த எதிர்நீச்சல் சீரியல் அவரது இறப்பிற்கு பின் சறுக்களை சந்தித்துள்ள நிலையில், தற்போது டி.ஆர்.பி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்த வானத்தை போல சீரியல் இந்த வாரம் 9.42 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆல்யா மானசாவின் இனியா தொடர் 8.20 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 6 இடங்களை சன்டிவி சீரியல்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், 7-வது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரியல், 7.72 புள்ளிகளை பெற்றுள்ளது. சன்டிவியின் ஆனந்த ராகம் சீரயில் 7.45 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 7.22 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஆஹா கல்யாணம் சீரியல் 6.88 புள்ளிகளுடன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment