Advertisment

மீண்டும் மாமியார் - மருமகள் மோதல்... ஜோடியாக சஞ்சீவ் - ஸ்ருதி ராஜ் : புதிய சீரியல் ப்ரமோ வைரல்

தாலாட்டு சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தற்போது லட்சுமி சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Lakshmi New Serial

தமிழ் சின்னத்திரையில் புதிதாக தயராகி வரும் சீரியலில் நடிகை ஸ்ருதி நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரும் பிரபல சீரியல் நடிகருமான சஞ்சீவ்வுடன் இணைந்து நடிக்கிறார்.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவிக்கு முக்கிய இடம் உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது பழைய சீரியல்கள் முடிவடைவதும், புதிய சீரியல்கள் தொடங்குவரும் வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது லட்சுமி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியலில், பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ராஜ் நடிக்கிறார். இந்த சீரியலின் ப்ரமோ இணையத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த ஸ்ருதி ராஜ், அடுத்து தென்றல் சீரியலில் நடித்திருந்தார். இந்த இரு சீரியல்களுமே அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து சன் டிவியின் தென்றல் சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தற்போது லட்சுமி சீரியலில் கமிட் ஆகியுள்ளார். இது குறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், திருமணத்திற்கு பின் என் சம்பளம் என் அம்மா வீட்டுக்கு தான் என்று ஸ்ருதி ராஜ் சொல்ல, என் மருமகள் சம்பளம் எனக்கு தான் என்று சஞ்சீவ் அம்மா சொல்கிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த சீரியலின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதால், எந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளது என்ற தகவல் வெளியாகாத நிலையில், மற்ற சீரியல்களை போலவே லட்சுமி சீரியலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment