சுந்தரி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் சக சீரியல் நடிகை ஒருவருடன் திருமணம் குறித்து பேசியுள்ளதாகவும் விரைவில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சுந்தரி. சமூகவலைதள பிரபலமான கேப்ரியல்ல செல்லூஸ் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில், ஜிஷ்ணு மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தனர். இதில் சுந்தரி கேரக்டரில் பாட்டியாக பழம்பெரும் நடிகை பி.ஆர் வரலட்சுமி நடித்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சீசன் முடிந்து தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் இருந்து ஒரு சில கேரக்டர்கள் நீக்கப்பட்டு, 2-வது சீசனில் ஒரு சில புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்ட்டுள்ளனர். அந்த வகையில் முதல் சீசனில் நாயகன் கார்த்தியின் நெருக்கிய நண்பன் கிருஷ்ணா கேரக்டரில் நடித்தவர் அரவிஷ்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் 2-வது சீசனிலும் அதே கேரக்டரில் நடித்து வரும் அவிரஷ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் இதனிடையே நடிகர் அரவிஷ், சக சீரியல் நடிகை ஹரிகாவை காதலித்து வருகிறார். சன்டிவியின் திருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஹரிகா, நடிகர் அரவிஷ் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“