சுந்தரி சீரியல் நடிகை நிச்சயதார்த்தம் : முதல் ஆளாக வாழ்த்து சொன்ன ரீல் கணவன் : வைரல் போட்டோஸ்

சுந்தரி சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சுந்தரி சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Sundari Sri Gopika

சீரியல் நடிகை ஸ்ரீகோபிகா

சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், திடீரென வெளியான அவரின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் சன்டிவியில், காலை முதல் நள்ளிரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒரு சில சீரியலகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ப்ரைம் டைம் சீரியல்களுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில், சன்டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் சுந்தரி.

Advertisment
Advertisements

பெண் கல்வியை அடிப்படையாக வைத்து வெளியான இந்த சீரியலின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது சுந்தரி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அனு என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் ஸ்ரீகோபிகா. தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2 வருடங்களுக்கு மேலாக கர்ப்பமாக இருப்பது போன்று நடித்து வந்தவர். இது குறித்து பல மீம்ஸ்கள் வந்திருந்தாலும், அது சீரியலுக்கு பெரிய ப்ரமோஷனாகவும் அமைந்தது.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீகோபிகா, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளர். நடிகர் வைசாக் ரவி என்பவரை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தற்போது அவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீகோபிகாவின் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சுந்தரி சீரியலில் அவரது கணவராக நடித்த நடிகர் ஜிஸ்னு மேனன் முதல் ஆளாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sundari Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: