Advertisment

அன்பே வா சீரியல் பூமிகா திடீர் விலகல்... இந்த காட்சி தான் காரணமா?

சன்டிவியின் அன்பே வா சீரியலில் நாயகி பூமிகா கேரக்டரில் நடித்து வந்த நடிகை டெல்னா டேவிஸ் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
anbe vaa boomika

அன்பே வா சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் பூமிகா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை டெல்னா டேவி்ஸ் தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

Advertisment

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விடியும் வரை பேசு என்ற படத்தில் அறிமுகமானவர் டெல்னா டேவிஸ்.  தொடர்ந்து பட்ர, கவுண்டமணியுடன் 49, விதார்த்துடன் குரங்கு பொம்மை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது சின்னத்திரையின் அன்பே வா சீரியல் தான்.

சன்டிவியின் ப்ரைம்டைம் சீரியலான இதில், விராட் நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூமிகா என்ற கேரக்டரில் டெல்னா டேவிஸ் நடித்து வருகிறார். தற்போதுவரை 900 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியல் விரைவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைய உள்ளதாக தகவல் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதனிடையே தற்போது அன்பே வா சீரியலில் நாயகி பூமிகா இறந்துவிடுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த காட்சியின் காரணமாக நாயகி பூமிகா ரோலில் நடித்து வந்த டெல்னா டேவிஸ் இனி அன்பே வா சீரியலில் இருக்க மாட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து டெல்னா டேவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் நான் பூமிகாவாக நடிக்கும் போது, உண்மையிலேயே என் இதயத்தில் இருந்து நடித்தேன். பூமிகா கேரக்டருடன் ஆழமான மற்றும் தீவிரமான தொடர்பை நான் உணர்கிறேன். இது எனக்கு ஆழ்ந்த உணர்வுபூர்வமான அனுபவம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பூமிகா சீரியலில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொண்ட டெல்னா டேவிஸ், கேரளாவில் தனது அரங்கேற்றத்தை நடத்தியுள்ளார். இந்த அரங்கேற்றத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்களை பார்த்து இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். அப்படி இவருக்கு கிடைத்தது தான் குரங்கு பொம்பை. விதார்த் பாரதிராஜா ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு கவுண்டமணி நாயகனாக நடித்த 49 ஓ படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Anbe Vaa Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment