தமிழ் சின்னத்திரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புதிதாக அனாமிகா என்ற புதிய திகில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. திகில் சீரியல் என்பதால் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில், தற்போது சீரியல்கள் முன்னணியில் இருந்து வருகிறது. குழந்கைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ள இந்த சீரியல்கள், காலை 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பெரும்பாலும் அனைத்து சீரியல்களுமே குடும்ப உறவுகளை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது.
பல வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில், திகில், மற்றும் பக்தி சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த்து. காலப்போக்கில் அவை நின்றுவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அனாமிகா என்ற புதிய திகில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. 'எதிர்நீச்சல்', 'சுந்தரி' மற்றும் 'கயல்' போன்ற முக்கிய சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவியில் 'அனாமிகா' சீரியல் மே 19-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளர்.
தர்ஷக், ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் திறமையான அக்ஷதா தேஷ்பாண்டே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த சீரியலில் நடிக்க உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடலிங் மற்றும் நடிப்பு ஆகிய இரு துறைகளிலும் குறிப்பிடத்தக்க நபரான அக்ஷதா தேஷ்பாண்டே, 'அனாமிகா' சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார்.
ரக்ஷித்துடன் இணைந்து 'மாதே வசந்தா' படத்தில் அறிமுகமானதன் மூலம் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திய தேஷ்பாண்டே, பிரபல கன்னடத் தொடரான 'காவ்யாஞ்சலி'யில் நடித்திருந்தார். தற்போது தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் வருவது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“