சன் டி.வி சீரியல் நடிகைகள் சம்பள விபரம்... ஆல்யாவை பின்னுக்கு தள்ளிய கேப்ரியல்லா

சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial Actress

Serial Actress

சினிமாவை விட சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் பலரும் சீரியல் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம்,சீரியல் நடிகைகள் தங்களது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதும் தான்.

Advertisment

மேலும் சீரியல் பார்ப்பது மட்டுமல்லாமல் அந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்களின் தனிப்பட் தகவல்களை தெரிந்துகொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

மதுமிதா

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பேசப்படும் ஒரு சீரயிலாக மாறியுள்ள எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா. கர்நாடகாவை சேர்ந்த இவர், எதிர்நீச்சல் தொடருக்கு முன்பு பல தொடர்களில் நடித்திருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக இவருக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

Advertisment
Advertisements

கேப்ரில்லா செல்லஸ்

டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்துள்ள கேப்ரியல்ல செல்லஸ் சன்டிவியின் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். வெள்ளி திரையிலும் படங்களில் நடித்து வரும் கேப்ரியல்லா சுந்தரி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சம்பளம் வழங்கபபடுவதாக கூறப்படுகிறது.

ஆல்யா மானசா

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, தற்போது இவர் சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஆல்யாவுக்கு ஒரு நாளைக்கு இவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஸ்ருதி ராஜ்

சன்டிவியின் தென்றல் சீரியல் மூலம் பிரபலமான ஸ்ருதி ராஜ் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்து வந்த தாலாட்டு சீரியல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இவர் சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

சைத்ரா ரெட்டி

ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலமான சைத்ரா ரெட்டி தற்போது சன்டிவியின் கயல் சீரியல்ல நடித்து வருகிறார். வலிமை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சைத்ரா, சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: