சன் டி.வி.யின் பிரபல சீரியலான மகராசி விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வரும் ஜூலை மாதம் மகராசி முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
சீரியலுக்கு பெயர் பெற்ற சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் முழுவதும் சீரியல்களே ஆக்கிரமித்துள்ளன. இதில் பல சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மகாராசி சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில், ஆர்யன் மற்றும் ஸ்ரீதிகா சனீஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். மேலும் விஜய், மௌனிகா தேவி, பிரவீனா, தீபன் சக்ரவர்த்தி, அஷ்வினி, செந்தில்நாதன், நேத்ரா ஸ்ரீ, ரவிசங்கர், சாத்விக், கீர்த்தனா, ராம்ஜி மற்றும் வந்தனா மைக்கேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எஸ்.பி ராஜ்குமார் மற்றும் என்.சுந்தரேஷ்வரன் ஆகியோர் இந்த தொடரை இயக்கி வருகின்றனர். ஹரித்வாரிலிருந்து தனது குழந்தையுடன் ரயிலில் புறப்படும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் தமிழ் என்பரை சுற்றி நடக்கும் கதையான இந்த சீரியலில், ஹரித்வாரில் இருந்து ரயில் புறப்படும் போது, பாரதி தமிழின் உதவியுடன் ரயிலை பிடிக்கிறார். அங்கு இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்கிறார்கள்
பாரதியிடம் தனது சோகமான திருமண வாழ்க்கையை குறித்து தமிழ் சொல்கிறார். ஆரம்பத்தில் தன் கூட்டுக் குடும்பத்தை விட்டு வெளியேறி தனது சக ஊழியரான ராகினியை தமிழ் திருமணம் செய்து செய்துகொண்டதால், அவரது அம்மா உடல்நிலை சரியில்லாமல், இறுதியில் கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறார். ஆனால் ராகினி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்பி தனது முழு பணத்தையும் செலவழிக்கிறார்.
இதனால் அவர்களுக்குள் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். அதன்பிறகு தமிழுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பாரதி, தான் ஹரித்வாரைச் சேர்ந்தவள் என்று சொல்லிவிட்டு மீதியை இன்னொரு நாளில் சொல்கிறேன் என்று கூறி தானும் உங்களுடன் சிதம்பரத்திற்கு வருகிறேன் என்று வற்புறுத்துகிறாள். தமிழ், அவரது மகள் மற்றும் பாரதியையும் பார்த்த அவரது குடும்பத்தினர், கடைசிவரை தங்கள் மருமகள் என்று நினைக்கிறார்கள். எல்லோரும் அவள் மீது பாசம் காட்டுகிறார்கள். தமிழின் தாயாரை கோமாவில் இருந்து மீட்டெடுக்க செய்த முயற்சியும் வெற்றி பெறுகிறது.
இது தமிழுக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. ஒரு நாள், பாரதி ஏற்கனவே திருமணமானவர் என்று தமிழுக்குத் தெரியும். அடுத்து என்ன நடக்கிறது என்பதே இந்த சீரியலின் கதையாக உள்ளது. விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் முடிய உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil