scorecardresearch

அறிவிப்பு இல்லாமல் முடிவுக்கு வந்த சன் டி.வி சீரியல் : அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil serial Update : இந்த சீரியலில் நடித்த சில நடிகர் நடிகைகளுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அறிவிப்பு இல்லாமல் முடிவுக்கு வந்த சன் டி.வி சீரியல் : அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Serial Poove Unakkaga Serial Sudden End Update : தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள கவர்ந்த பல சீரியல்கள் உள்ளன. இந்த சீரியல்களில் கேரக்டர்கள் மற்றும் சேர ஸ்லாட்டுகள் மாற்றினாலும் சீரியலுக்கு உண்டான வரவேற்பு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்லாம். அந்த வகையில் அமைந்தது தான் பூவே உனக்காக சீரியல்.

பொதுவாக தமிழில் ஹிட்டான படங்களின் தலைப்பை சீரியலுக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அநத வகையில் சன்டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலின் தலைப்பு 90-களில் வெளியான விஜயின் பிளாக்பஸ்டர் படமான பூவே உனக்காக டைட்டில் தான். முக்கோன காதல் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடம் பெற்றது.  

தொடக்கத்தில் அருண், ராதிகா ப்ரீத்தி லீட் ரோலில நடித்து வந்த இந்த சீரியலில் முதலில் அருண் வெளியேறினார். அவருக்கு பதிலாக அசீம் கமிட்டான நிலையில், அடுத்த சில நாட்களில் ராதிகா ப்ரீத்தியும் வெளியேறினார். அவருக்கு பதிலாக வர்ஷினி கமிட்டானார். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிகா லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். ஆனால் சில எபிசோடுகளில் அவர் தனது படிப்பை தொடர விரும்புவதாக கூறி சீரியலில் இருந்து வெளியேறினார்.

இன்னும் பல நட்சத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டாலும் சீரியலுக்கான வரவேற்பு குறையாத நிலையில், தற்போது திடீரென சீரியலை முடித்துவிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்தில் இந்த இறுதிக்கட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கியதாக தகவல்கள் வெளியானது. இந்த காட்சிகளை கவனித்த நடிகர் நடிகைகள் இந்த சீரியல் முடிலுக்கு வருதை உணர்ந்துகொண்டனர்.

இதில் சில நடிகர் நடிகைகளுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 572 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பூவே உனக்காக சீரியல் ரசிகர்கள் பெரிய சோத்தில் ஆழந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil suntv serial poove unakkaga serial gone end serial team shock