தாமரைச்செல்வி- ராஜலட்சுமி 10 வருடங்களுக்கு முன்பே ஃப்ரெண்ட்: எப்படி தெரியுமா?

Tamil Biggboss Update : வறுமை காரணமாக சிறுவயதிலேயே நாடகத்தில் சேர்ந்த தாமரைச்செல்வி, தற்போது மேடை நாடகங்களில் நடனமாடி வருகிறார்

Super Singar Rajalakshmi Say About Biggboss Thamari : மேடை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவர்கள் செந்தில்கணேஷ் – ராஜலட்சுமி. இவர்கள் குரலில் வெளியான சின்ன மச்சான் என்ன புள்ள பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் பல மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடியுள்ள இவர்கள், விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள இவர்கள் தற்போது சினிமாவில் பாடி வருகிறனர். அந்த வகையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி குரலில் இடம்பெற வாய சாமி பாடல் தற்போது சமூக வலைதளஙகளில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராஜலட்சுமி பிக்பாஸ் தாமரைச்செல்வி பற்றி பேசியிருக்கிறார்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞராக அப்பகுதியில் புகழ் பெற்ற தாமரைச்செல்வி கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசனில் பங்கேற்று விளையாடி வருகிறார். தொடக்கத்தில் ஒன்றும் தெரியாமல் சக போட்டியாளர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு விளையாடி வந்த இவர் தற்போது அனைத்து போட்டியாளர்கள் மட்டுமல்லாது தொகுப்பாளர் கமல்ஹாசனே ஆச்சரியப்படும் அளவிற்கு விளையாடி வருகிறார்.

18 போட்டியாயர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 8 பேர் வெளியேற்றப்பட்டு வைல்டு கார்டு என்டரியான சஞ்சீவ் அமீர் ஆகியோருடன் 10 பேர் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இதுவரை 83 நாட்கள் முடிந்துள்ள இன்னும் 2 வாரங்களில் பிக்பாஸ் சீசன் 5 முடிவுக்கு வர உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பிரபலமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது தாமரைச்செல்வி நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருக்கிறார்.

வறுமை காரணமாக சிறுவயதிலேயே நாடகத்தில் சேர்ந்த தாமரைச்செல்வி, தற்போது மேடை நாடகங்களில் நடனமாடி வருகிறார். இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில், தாமரைச்செல்வி குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில்,

தாமரைச்செல்வி அக்காவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாட வந்தபோது சந்தித்தேன். அன்றிலிருந் அவரை எனக்கு தெரியும். அவர் எனக்கு நல்ல பழக்கம். அதன்பிறகு அவரை பார்க்கவோ பேசவோ இல்லை. ஆனால் சிற ஆண்டுகளுக்கு பிறகு அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த முயற்சி நல்ல விஷயம்ான். எங்கேயோ இருந்த ஒரு நாடக கலைஞருக்கு இப்படி ஒரு மேடை வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள். இது அவரின் வாழ்க்கைக்கும் நாடகத்துக்கும் ஒரு மிகப்பெரிய பூஸ்டாக அமையும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil super singar rajalakshmi say about biggboss contestant thamari

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express