Advertisment

தாயுடன் மேடையேறிய சூப்பர் சிங்கர் செந்தில்: கண்கலங்க வைத்த அம்மா பாடல்

Tamil Reality Show : ப்ரமோவில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
தாயுடன் மேடையேறிய சூப்பர் சிங்கர் செந்தில்: கண்கலங்க வைத்த அம்மா பாடல்

Tamil Vijay Tv Reality Show Update : தமிழ் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் விஜய் டிவி முன்னணியில் உள்ளது. அதே போல் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாவிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக டிஆர்பி ரேட்ங்கில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவி அடிக்கடி வித்தியாசமான புது ரியாலிட்டி ஜோக்களை களமிறக்கி வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

Advertisment

அந்த வகையில், விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஷோ தாயில்லாமல் நானிலை. விஜய் டிவியின் சீரியல் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் தங்களது அம்மாவுடன் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி தொடர்பான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பிரபலங்கள் தங்களது தாயுடன் கலந்துகொளும் நிகழ்ச்சி என்பதால், விஜே அர்ச்சனா தனது மகள் சாராவுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனது அம்மாவுடன் கலந்துகொள்ளும் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், தாய்மார்களை கவுரவிக்கும் விதமாக பாடல் பாடியுள்ளார். ப்ரமோவில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு மேலம் எதிர்பார்ப்பு அதிகாரித்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், ரோடியோவில் ஆர்ஜேவாக தனது மீடியா பயணத்தை தொடங்கிய விஜே அர்ச்சனா சின்னத்திரையில் பல நிகழ்சசிகளை தொகுத்து வழங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருகிறார். இடையில் உடல்நலக்குறைபாடு காரணமாக விஜேவுக்கு இடைவெளிவிட்ட இவர் தற்போது தாயில்லாமல் நானில்லை நிகழ்ச்சியின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவர் தனது மகள் சாராவுடன் களமிறங்கியுள்ளதால், இந்நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் உள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் விஜேவாக தன்னை நிரூபித்துள்ள அர்ச்சனா தற்போது தனது மகளுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதில் தாய் மகள் இருவரும் ஏற்கனவே யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகினறனர். இந்த செனலை ரசிகர்கள் பலரும் ஃபாலோ செய்து வரும் நிலையில், யூடியூப்பில் பார்த்த தாய் மகள் நிகழ்ச்சி தொகுப்புத்திறனை தற்போது சின்னத்திரையில் காண ஆவலுடன் உள்ளனர் ரசிகர்கள்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamil Reality Show Senthil Ganesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment