விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் முடிவடைந்த நிலையில், இதில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜான் ஜெரோம் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு அடுத்ததாக ஜீவிதா என்பவர் 2-வது இடம் பிடித்தார்.
தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி முன்னணியில் இருப்பது விஜய் டிவி. இந்த டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 9 சீசன்கள் முடித்திருந்த இந்த நிகழ்ச்சியின் 10-வது சீசன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில், நிகழ்ச்சிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களான மாகாப ஆனந்த் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், ஜான் ஜெரோம், ஜீவிதா, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, விக்னேஷ் ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் ஜெரோம் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜீவிதா 2-வது இடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற ஜான் ஜெரோம்க்கு ரூ60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்ட நிலையில், 2-வது இடம் பிடித்த ஜீவிதாவுக்கு ரூ10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜீவிதா, தனது பள்ளி படிப்பை தனது சொந்த ஊரிலேயே முடித்துள்ள ஜீவிதா கல்லூரி படிப்பை, சென்னை எத்துராஜ் மகளிர் கல்லூரியில் படித்துள்ளார்.
கல்லூரியி பி.காம். சி.எஸ் படித்துள்ள ஜீவிதா, சிறுவயதில் சிறப்பாக பாடும் திறன் பெற்றிருந்த ஜீவிதா, தனது கல்லூரி படிப்பின்போது பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரியில் நடைபெற்ற பல கலாச்சார விழாக்களில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள ஜீவிதா, தனது கல்லூரி மட்டுமல்லாமல் மற்ற கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களுக்கும் சென்று, வெற்றிகளை குவித்துள்ளார்.
தான் பாடுவது தனது அப்பாவுக்கு பிடிக்கும் என்பதால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்து, ஆடிஷனில் பங்கேற்றுள்ள அதில் வெற்றியும் பெற்று, சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் பாட தேர்வாகியுள்ளார். தனது பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜீவிதா முதல்பரிசு பெறவில்லை என்றாலும், 2-வது இடத்தை பிடித்து தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“