Advertisment

சூப்பர் சிங்கர் வின்னர் அருணாவுக்கு வீடு, ரூ.10 லட்சம் பரிசு: ட்ரெண்டி பூஜாவுக்கு ஏமாற்றம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசனில், அருணா, பூஜா, அபிஜித், பிரசன்னா, பிரியா ஜெர்சன் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

author-image
WebDesk
New Update
Super Singer

விஜய் டி.வி சூப்பர் சிங்கர்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில்,பங்கேற்ற அருணா, பிரியா ஜெர்சன் மற்றும் பிரசன்னா ஆகியோர் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆடிஷன் நடத்தி அதில் இருந்து 20 போட்டியாளர்களை தேர்வு செய்து நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பு ஆண்டில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசனில், அருணா, பூஜா, அபிஜித், பிரசன்னா, பிரியா ஜெர்சன் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதில் நேற்று இறுதிப்போட்டி நடத்தப்பட்ட நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போட்டியாளர்களின் திறமைக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் அருணா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ10 லட்சம் பணம் வழங்கப்பட்டது. அடுத்து பிரியா ஜெர்சன் 2-வது இடம் பிடித்தார். அவருக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கையால் ரூ10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சிறப்பான பாடல்களை பாடி அசத்திய பிரசன்னாவுக்கு 3-வது இடம் கிடைத்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு ரூ5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த சீசனில் டிஜே பிளாக்குடன் இணையத்தில் அதிகம் ட்ரெண்டான பூஜா முதல் 3 இடத்தில் வருவார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அவரதால் முதல் 3 இடங்களை பிடிக்க முடியாமல் போனது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Super Singer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment