Tamil Tv Show Zee Tamil Super Queen Grand Finale : கோடைகாலம் வந்துவிட்டாலே பலரும் கடுமையான இன்னல்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்று. இதில் வார நாட்களில் பணியில் காரணமாக கடுமையான வெயிலையும் தாங்கிக்கொண்டு பலரும் வேலைக்கு சென்றாலும் கூட வார இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே விரும்ப மாட்டார்கள். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் என அனைவருமே இதே மனநிலையில் தான் இருக்கின்றனர்.
இந்த காலட்டத்தில் மக்களுக்கு இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டிவி பார்ப்பது. ஆனால் அன்றைய தினத்திலும், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் எதுவும் சரியாக வரவில்லை என்றால் வீட்டில் இருந்ததற்கு வெயில் கூட பார்க்காம வெளியிலேயே போய்ருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால் தற்போது டிவி நிகழ்ச்சியில் மக்களின் ரசனைக்கேற்ப நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது சற்று ஆறுதலான விஷயம்.
அதிலும், மற்றமொழி திரைப்படங்களை பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு வசதியாக வேற்று மொழிகளில் வெளியான திரைப்படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் கோடைகால ஸ்பெஷலாக கடந்த வாரம் அகண்டா திரைப்படத்துடன் தனது கோடைகால ஸ்பெஷல் எபிசோட்டை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து இந்த வாரத்தை மக்களுக்கு ஸ்பெஷல் சண்டேவாக கோடை காலத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுளளது. அதன்படி இந்த வாரம் சண்டே, ஜீதமிழின் சூப்பர் ஹிட் சீரியலான ரஜினி தொடரின் சிறப்பு எபிசோடுடன் துவங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ காதல் திரைப்படமும், சூப்பர் குயின் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவுள்ளது.
இதில் மாலையில் நடைபெறும் சூப்பர் குயின் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலேவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மற்றும் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். நடிகர் அஷ்வின் குமார் செலிபிரிட்டி நடுவராக பங்கேற்கவுள்ளார். இதனால் இந்நிகழ்ச்சியின் மீத ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil