Actress Vijayalakshmi Say About Survivor Experience : ஜீ தமிழில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ சர்வைவர். தகவல் தொடர்பு இல்லாமல் ஒரு தீவுக்குள் இருந்து வெளியில் வரவேண்டும் என்ற கான்சப்டை மையமாக வைத்து நடத்தப்பட் இந்நிகழ்ச்சியில், விக்ராந்த், விஜயலட்சுமி, சஷ்டிகா, நந்தா, உமாபதி, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி, இனிகோ பிரபாகரன், பெசன்ட் ரவி உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் அனைத்து போட்டியாளர்களையும் வீழ்த்திய நடிகை விஜயலட்சுமி, சர்வைவர் சாம்பியன் பட்டம் வென்றதுடன ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்றார். கடந்த 3 மாதங்களாக பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாமல் நடத்தப்பட்டு வந்த இந்நிகழ்சி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களுமே நிகழ்ச்சி முடியும் வரை ரொம்பவே கஷ்டத்தை அனுபவித்து வந்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரிந்திருக்கும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த போட்டியாளர்கள் தற்போது தங்களது சமூக வலைதளங்களில் சர்வைவர் அனுபவங்களை பகிரத்தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போ சாம்பியன் விஜயலட்சுமி தற்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் சர்வைவர் நிகழ்ச்சியின் போது தனது காலில் காயம் ஏற்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதுவும் ஈஸியாக கிடைத்துவிடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், சாம்பியன் பட்டம் வென்றது குறித்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகி்றனர். இதிலும் சிலர் கஷ்டப்பட்டால் தான் ஒரு கோடி கிடைக்கும் சும்மா கொடுத்துவிடுவார்களா என்று கேட்டு வருகினறனர்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி தனது சர்வைவர் அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, தெரிவித்துள்ளார். மேலும் போட்டியாளர் உமாபதி ஏன் இறுதிப்போட்டிக்கு அழைத்துச்செல்லவில்லை என்பது குறித்து விளககம் அளித்துள்ள விஜயலட்சுமி, நாங்கள் செய்தது வேறு நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது வேறு என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil