scorecardresearch

பாக்ஸிங்கில் தங்கம்… சின்னத்திரையில் நடிப்பு… ஆல்ரவுண்டராக கலக்கும் சீரியல் நடிகை

Tamil Actress Update : கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சௌத் இந்தியா பேஷன் பேஜன்ட் போட்டியில் வெற்றி பெற்றவர் ஐரா அகர்வால்

பாக்ஸிங்கில் தங்கம்… சின்னத்திரையில் நடிப்பு… ஆல்ரவுண்டராக கலக்கும் சீரியல் நடிகை

Tamil Serial Actress Iraa Agarwal Update In tamil : தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை விட சீரியல்கள் மக்கள் மத்தியில் சிறந்த பொழுபோக்கு அம்சமாக உள்ளது. இதனால் திரைப்பட நடிகர்கள் பலரும் தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து வரும் நிலையில். இந்த நடிகர்களை வைத்து அவ்வப்போது புதிய சீரியல்களையும் களமிறக்கி வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஐரா அகர்வால். சென்னையை சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சௌத் இந்தியா பேஷன் பேஜன்ட் போட்டியில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்பு குவிந்து வரும் நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கில் வாடு வீடு கல்பனா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் அறிமுகமான இவர், கட்டுப்பய சார் இந்த காளி தாயம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த இவர், அதன்பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சன்டிவியின் கங்கா சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சன்டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில், வானதி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் கடைக்குட்டி சிங்கம் ஜீதமிழின் ராஜா மகள், ஆகிய தொடர்களில் நடித்த ஐரா தற்போது கலர்ஸ் தமிழின் நம்ம மதுரை சிஸ்டர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் மாடலிங். விளம்பரம், என பிஸியாக இருந்து வரும் ஐரா, ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், தங்கம் வென்றுள்ளார்.

கடந்த 6-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய சர்வதேச போட்டிகளில் 48 கிலோ லைட் வெயிட் பிரிவில், தங்கம் வென்று சாதித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஐரா அகர்வால், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில், வெளியிட்டுள்ள பாக்சிங் பயிற்சி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஐராவின் திறமையை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil television actress iraa agarwal boxing player update in tami

Best of Express