சிறுவயதில் விஜய்டிவி பிரபலம் : வைரலாகும் கியூட்டான குழந்தை

Vijay TV Celebrity : விஜய்டிவி பிரபலம் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திரைப்படத்தை விட தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது போல, சினிமா நட்சத்திரங்களுக்கு நிகராக சீரியல் நட்சத்திரங்களும், ரசிகர்கள்மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் குக் வித் கோமாளி நிகழச்சியை தொகுத்து வழங்கியதான் மூலம் புகழ்பெற்றவர் ரக்ஷன்.

தனது தோற்றம் பேச்சு ஆகியவற்றின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள இவர், துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கண்ணும்கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் 2-ம் நாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரக்ஷனுக்கு இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனால் அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ரக்ஷன் தற்போது தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த பதிவில், இருவரும் டாம் அண்ட் ஜெரி போல இருப்பதாக கூறியுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil television anchor vj rakshan post childhood photos in instagram

Next Story
கொரோனா நோயாளிகளுக்கு ஆசிரமம்: முன்மாதிரியாக நிற்கும் இயக்குனர் லிங்குசாமி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com