/tamil-ie/media/media_files/uploads/2021/05/Gabril.jpg)
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை கேபிரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் கேபிரியல்லா. தொடர்ந்து விஜய் டிவியின் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்ற இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹாய் மக்களே.. எனக்கும் கொரோனா உறுதியாகி விட்டது என பதிவிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Gabi.jpg)
மேலும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும், தன்னை கொரோனா தாக்கி விட்டது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. நலமுடன் தான் உள்ளேன். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Gav.jpg)
2009ம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் மற்றும் 2013-ம் ஆண்டு நடைபெற்றஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றிக்கனியை பறித்த அவர், முரட்டு சிங்கிள்ஸ் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.