/indian-express-tamil/media/media_files/GBVeTdiVFV4soMELYWV1.jpg)
எதிர்நீச்சல் ப்ரமோ
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து இறந்துவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் நடிக்க வந்த நடிகர் வேல ராமமூர்த்தி தற்போது சிறைக்கு செல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், இனி குணசேகரன் கேரக்டர் இல்லாமல் சீரியலின் கதை வேறு கோணத்திற்கு திரும்ப உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். மேலும் அவரின் வசன உச்சரிப்பு பல மீம்ஸ்களுக்கு பொருந்துகிற மாதிரியான டெம்ளேட்டாக மாறியது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த சீரியலின் நாயகியை விட வில்லன் குணசேகரனுக்கே ரசிகர்கள் அதிகம்.
ஆனால் சமீபத்தில் நடிகர் மாரிமுத்து திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த குணசேகரன் யார், மாரிமுத்துவின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், கடந்த வாரம் நடிகர் வேல ராமமூர்த்தி குணசேகரனாக என்டரி கொடுத்தார். ஆனால் அவர் மாரிமுத்து போல் இல்லாமல் தனக்கே உரிய அதிரடி பாணியில் என்டரி கொடுத்து முதல் காட்சியிலேயே போலீசை அடித்து அறிமுகமானார்,
அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர், தனது அதிரடி ஆக்ஷனை தொடர்ந்த நிலையில். அடுத்த இரு தினங்களில் அவர் போலீசை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பட்டார். இதனால் குணசேகரன் கேரக்டர் இல்லாமல் சீரியல் கதை வேறு கோணத்திற்கு மாறப்போகிறது என்று தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது பாரிசில் இருந்து தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் வேல ராமமூர்த்தி.
பல திரைப்படங்களில் நடித்து வருவதால், அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் சீரியலில் என்டரி ஆவார் என்றும், அதுவரை அவர் இல்லாமல் சீரியல் கதை வேறு கோணத்தில் பயணிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஜீவானந்ததத்தின் மனைவியை கொன்றது குணசேகரனும் கதிரும் தான் என்ற உண்மையை ஈஸ்வரி சொல்லிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பத்தாவை கொலை செய்ய கதிர் போடும் ப்ளான் என்னவாகும் என்பது குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.