கோவையில் அசத்தப்போவது  யாரு "சீசன்-2" : மக்கள் கொண்டாட்டம்

நிகழ்ச்சியின் இயக்குனரான ராஜ்குமார், சின்னத்திரை புகழ் மதுரை முத்து மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவையில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

நிகழ்ச்சியின் இயக்குனரான ராஜ்குமார், சின்னத்திரை புகழ் மதுரை முத்து மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவையில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

author-image
WebDesk
New Update
Madurai Muthu Coimbatore

மதுரை முத்து - கோயம்புத்தூர்

அசத்தப்போவது யாரு "சீசன்-2" நிகழ்ச்சி கோவையில் வருகிற ஜூலை இரண்டாம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அந்த நிகழ்ச்சியின் இயக்குனரான ராஜ்குமார், சின்னத்திரை புகழ் மதுரை முத்து மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவையில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

Advertisment

அப்போது பேசிய இயக்குனர் ராஜ்குமார், கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சின்னத்திரை நிகழ்ச்சியை 200 வாரங்களுக்கு மேலாக இயக்கியுள்ளேன். அதன் மூலம் 300 கலைஞர் அறிமுகம் செய்துள்ளேன். இதில் 50கலைஞர்கள் மிக பெரிய நச்சத்திரமாக உள்ளனர். ஆரம்ப காலங்களில் திறமைகளை தேடி சென்று அறிமுகம் செய்தது போல கடந்த ஒரு வருடமாக பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று திறமையானவர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளேன்.

நிகக்ச்சியில் ரோபா சங்கர், ஈரோடு மகேஷ் மதுரை முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். தங்களுடைய திறமைகளை  வளர்த்து கொள்ளும் எண்ணங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. வாய்ப்பு கிடைத்தும் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. திறமைகளை மேடை நிகழ்ச்சியில் வறுமைக்காக பயன்படுத்தியதால் சின்னத்திரை,பெரியத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மதுரை முத்து, அசத்தப்போவது யாரு "சீசன்-2" நிகழ்ச்சியில் 100"க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் மகிழ்விக்க உள்ளனர். ஏக்கத்தில் உள்ள கோவை மக்களுக்கு இது ஒரு வாய்ப்பு. சின்னத்திரைக்கு வருவதற்கு முன் கடினமான உழைப்பு இருந்தது. வாட்சப் யூடியூப் ஏதும் இல்லாத காலத்தில் ஜெயிப்பது பெரிய கஷ்டம். இன்றைய காலத்தில் ஒரு காமெடி பண்ணணும்னா யூடியூப்பில் நான்கு வீடியோ பார்த்த ஒரு பேச்சாளர் என ஆகி கொள்கிறார்கள்.

Advertisment
Advertisements

நன்றாக பேசுபவர்கள் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்றால், தனக்கு தானே ஒரு அடையாளங்கள் உருவாக்கி கிட்ட தான் ஜெயிக்க முடியும். இளைஞர்கள் நன்றாக உழைக்க வேண்டும். தற்போது பாபா பிலக்ஷித் எனும் படத்தில் தமிழ் ஆசிரியராக நடித்துள்ளேன். தியேட்டர் ஒரு கோவில் மாதிரி,கோவிலுக்குள் இவங்க இவங்க தான் போக வேண்டும் என உள்ளது.

தியேட்டருக்கு எல்லாரும் வரலாம்,சாதியை சார்ந்த விசயம் இல்லாமல் இருந்தா சிலர் மறந்துள்ளார்கள்,பேச பேசதான் ஞாபகம் வந்துட்டே இருக்கும் தியேட்டரில் மட்டும் தான் ஜாதி மதம் இல்லாமல் உட்கார்ந்த ரகசியம் ,அதிலும் பூத்தல் இல்லாமல் இருந்தால் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: