பண்டிகை நாட்களில் தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். அதேபோல் பண்டிகை நாட்களில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் படங்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். இதில் தங்களுக்கு பிடித்தமான நடிகரின் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது கூட ரசிகர்கள் அந்த படத்திற்கு பெரிய வரவேற்பை கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. இன்று (அக் 21) தொடங்கிய வரும் 24-ந் தேதி வரை விடுமுறை தினம். இதில் திங்கள் கிழமை சரஸ்வதி பூஜை, செவ்வாய் கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது இறைவனை வணங்குவது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளையும் மக்கள் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி தினத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவி
ஆயுதபூஜை (அக்டோபர் 23)
காலை 8 மணி - வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா (சிங்க பெண்ணே ஸ்பெஷல்)
காலை 9 மணி - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல் ஸ்பெஷல்
காலை 10 மணி - பேச்சில்லை வீச்சு தான் (வானத்தைபோல ஸ்பெஷல்)
காலை 11 மணி – பேட்ட (ரஜினிகந்த்)
மதியம் 3 மணி - உனக்கும் எனக்கும் (ஜெயம்ரவி)
மாலை 6.30 மணி – மாவீரன் (சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் படம்)
இரவு 10 மணி - பாரீஸ் ஜெயராஜ் (சந்தானம்)
விஜயதசமி (அக்டோபர் 24)
காலை 8 மணி - கிராமத்தில் ஒருநாள்
காலை 9 மணி – உடன்பிறப்பே (திரைப்படம்)
காலை 10 மணி - செல்ல கலெக்டர் சுந்தரி (சுந்தரி சீரியல் ஸ்பெஷல்)
காலை 11 மணி - சிங்கம் 2
மதியம் 2 மணி - எதிர்நீச்சல் கலாட்டா (எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல்)
மதியம் 3 மணி - நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
ஜீ திரை
ஆயுதபூஜை தினத்தில்
பகல் 12 மணி - தி கிரேட் இந்தியன் கிச்சன் (ஐஸ்வர்யா ராஜேஷ்)
விஜயதசமி தினத்தில்
பகல் 12 மணி - பொம்மை நாயகி (யோகிபாபு)
விஜய் டிவி
ஆயுதபூஜை தினத்தில் காலை 10.30 மணிக்கு மாமன்னன், விஜய தசமி தினத்தில் காலை 10.30 மணிக்கு குட் நைட்
கலைஞர் டிவி
ஆயுத பூஜை தினத்தில் பகல் 1.30 மணிக்கு – விடுதலை, மாலை 6 மணிக்கு லவ் டுடே
விஜயதசமி தினத்தில் பகல் 1.30 மணிக்கு அகிலன்
ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதில் லவ்டுடே குட்நைட் மற்றும் விடுதலை படத்திற்கு டி,ஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“