விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் கேட்ட கேள்விக்கு பெண் ஒருவர் கதறி அழுத்த நிகழ்வு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூகத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு குறித்து இருவேறு கருத்துடைய குழுவினரை அழைத்து விவாதிக்கப்பவடும் இந்நிகழ்ச்சிக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம்.
நிகழ்ச்சி தொடங்கியது முதல் தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவரின் அற்புதாமான பேச்சுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல நிகழ்ச்சியில் கோபிநாத் அவ்வப்போது செய்யும் சில சம்பவங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது வரும் ஏப்ரல் 23-ந் தேதி ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வார நிகழ்ச்சியில் தாய் இல்லாமல் தந்தை வளர்ப்பில்’ வளர்ந்த பிள்ளைகள் மற்றும் அவர்களின் தந்தை கலந்துகொண்டுள்ளனர். அம்மா இல்லாத நிலையில், தந்தை தனக்காக செய்த தியாகங்களை புரிந்துகொண்ட பிள்ளைகளும் அதனை புரிந்துகொள்ளாத பிள்ளைகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஒரு தந்தை தனது மகனை 3 வயதில் இருந்து வளர்க்கிறேன். இப்போது அவருக்கு 27 வயதாகிறது. இதை சொல்லும்போது கோபிநாத் அந்த தந்தையை பாராட்டுகிறார். அதேபோல் மற்றொரு தந்தை நான் எனது மகனுக்கு வில்லனாகவும் ஹிட்லராகவும் தான் இருந்திருக்கிறேன். ஒரு நல்ல தகப்பானாக இல்லை. ஆனால் இன்று அவனை நன்றாக வளர்த்திருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார்.
அதனைத் தொடர்ந்து பேசும் ஒரு பெண் என் அப்பாவை அப்பாவாகத்தான் பார்க்கிறேன். இத்தனை வருஷமாக அப்படித்தான் இருந்திருக்கிறார் என்று சொல்லும் போதே அவரது அப்பா அழுகிறார். வெளியில் எங்கு பார்த்தாலும் உனது அப்பா மாதிரி வராது என்று சொல்வார்கள் என்று சொல்லும் அந்த பெண்ணும் அழுகிறார். இந்த ப்ரமோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அப்பா என்றால் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் மத்தியில் இப்படியும் அப்பாக்கள் இருக்கிறார்கள் என்று பலரும் தங்களது அப்பாவை பற்றிய கருத்துக்களை ப்ரமோவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் நீயா நானா இந்த வார எபிசோடு வழக்கத்திற்கு மாறாக அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil