tamil serial news, ambika serial, sun tv serials, நாயகி சீரியல், கூத்தபிரான், அம்பிகா,
Sun TV Nayagi Serial : ’நாயகி’ சீரியலில் சற்குணம், கூத்தபிரான் ஜோடிப் பொருத்தம், எல்லாரும் சிலாகித்து பேசும் ஒரு மாதிரியான நல்ல பொருத்தம். என்னதான் கோவிட் 19 தொற்று என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்றாலும், சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் வழக்கம் போல நடிகர் நடிகை நேர்காணல் என்று இடம் பெற்று தான் வருகிறது.
Advertisment
சமீபத்திய வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாயகி சீரியலின் கூத்தபிரான் வந்து இருந்தார். நாயகி வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கேட்டபோது, குமரன் சார் அடையாறில் இருக்கும் வாசன் அவர்கள் இல்லத்துக்கு வர சொன்னதாக போன் கால் வந்தது. போனேன், நாயகி என்று ஒரு சீரியல் எடுக்கப்போவதாக கூறி, அதில் நீங்க கூத்தபிரான் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
வீட்டுக்கு உள்ளேயே போக மாட்டீங்க. வெளியில் தான் எப்போதும் இருப்பீங்க. போட்டுக்க சட்டை கூட கிடையாது. கை வச்ச உள் பனியன் தான். மனைவிக்கு பயந்த மனிதர். இது தான் உங்க கேரக்டர் என்று சொன்னார்கள். ஜோடி யார்னு கேட்ட உடனே தான் ஆடிப்போயிட்டேன். நடிகை அம்பிகான்னு சொன்னாங்க. நான் சிவப்பு மனிதன் படம் எடுக்கும்போது, அம்பிகா மேம்க்கு நான் டயலாக் சொல்லிக் கொடுத்த அனுபவம் இருக்கு. அந்த படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். நான் படத்துக்கு கோ டைரக்டரா இருந்தேன். அப்போது அம்பிகா மேம் கூட பணியாற்றிய அனுபவம் இருக்கு. இதெல்லாம் நடக்குமான்னு எனக்கு ஆச்சரியமா இருக்குது. இருந்தாலும் இப்போ அம்பிகா மேம் ஜோடியா நடிக்கிறேன்.
Advertisment
Advertisements
முதல் ஷாட்டிலேயே அம்பிகா மேமிடம் உள்ளே போயி அடிவாங்கிட்டு, நாய் மாதிரி வெளியில் நடந்து வரும் சீன் தான். ரெண்டு வருஷமா நாயகி சீரியல் குடும்பத்தோட ரொம்ப ஜாலியா நடிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போது லாக்டவுன் நேரத்தில் நாயகி குடும்பத்தினர் எல்லாரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று கூறினார் கூத்தபிரான். நாயகி சீரியல் இப்போது சன் டிவியில் மறு ஒளிபரப்பாகி வருது. திரு, ஆனந்தி கல்யாணம் இவ்ளோ இழுவை கட்சியிலா, இத்தனை எபிசோடிலா போயிகிட்டு இருக்குது? இதை நாம் அப்போது அவ்ளோ பொறுமையா பார்த்தோமா என்கிற எண்ணம் சீரியல் பார்த்த மக்களின் மனதில் அவ்வப்போது வந்து செல்கிறது. என்ன இழுவையா இருந்தாலும் இந்த சீரியல்தாங்க ரேட்டிங்கில் நம்பர் ஒன்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”