டி.வி சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்: டாப் 5-ல் பாக்கியலட்சுமி இல்லை; அப்போ நம்பர் 1 எந்த சீரியல்?

சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை நிர்ணையம் செய்வதே இந்த டிஆர்பி ரேட்டிங் தான்.

சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை நிர்ணையம் செய்வதே இந்த டிஆர்பி ரேட்டிங் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalakshmi Serial

பாக்கியலட்சுமி சீரியல்

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களை போலவே சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இல்லத்தரிகள் மட்டுமே கண்டு ரசித்து வந்த டிவி சீரியல்கள் தற்போது இளைஞர்களும் ரசிக்கும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. திரைக்கதையில் மாற்றம், புதிய ட்விஸ்ட், திறமையான நடிகர்கள் என டிவி சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Advertisment

அதோடு மட்டுமல்லாமல் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கும், நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதிக்கும் அளவுக்கு டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தில் வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம். பிடித்த சீரியல்கள் முடிந்தாலும் ஃபீல் பண்ணுவார்கள். பிடிக்காத சீரியல் தொடர்ந்தாலும் ஃபீல் பண்ணுவார்கள்

அந்த அளவிற்கு மக்களுடன் ஒன்றிவிட்ட சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெறுவதற்காக போட்டியில் களம் காணும். இன்னும் சொல்லப்போனால் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை நிர்ணையம் செய்வதே இந்த டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள டிவி சீரியல்களின் ரேட்டிங்கை பார்ப்போம்.

கயல்

Advertisment
Advertisements

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 10.08 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. சைத்ரா ரெட்டி சஞ்சீவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், கயல் தனது சகோதரியின் திருமணத்தை ஏற்பாடு செய்வதிலிருந்து தனது மாமாவை எதிர்கொள்வது வரை பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை கவரும் கதையம்சகம் கொண்டகயல் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணி முதல் 9:30 மணி வரை ஒளிபரப்பாகிறது.

இனியா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடர் இந்த பட்டியலில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2 வாரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. ஆல்யா மானசா முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் 8.95 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

வானத்தை போல(8.88), எதிர் நீச்சல் (8.80) மற்றும் சுந்தரி (8.50) ஆகிய தொடர்கள் 3-வது, 4-வது மற்றும் 5-வது இடங்களைப் பெற்றுள்ளனர். இந்த வாரத்தின் டிஆர்பி ரேட்டிங்கில் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பெறாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

விறுவிறுப்பும் பரபரப்பும் குறையாத பாக்கியலட்சுமி சீரியல் 7.64 டிஆர்பி ரேட்டிங்கைப் பெற்று 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆனந்த ராகம், சீரகடிக்க ஆசை ஆகியவை முறையே எட்டு, ஒன்பதாவது மற்றும் பத்தாம் இடங்களைப் பிடித்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: