Advertisment

டாப் 10-ல் ஜீ தமிழ் சீரியல்... எதிர்நீச்சலுக்கு சறுக்கல் : இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்

தமிழ் சின்னத்திரை சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Serial TRP Rating

தமிழ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், அந்த சீரியலுக்கு வரும் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொருத்தே அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறதா இல்லையா என்பது தெரியவரும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த பட்டியலில், சன்டிவியில் கயல் சீரியல் முதலிடத்தில் உள்ளது. காதல் குடும்பம் உள்ளிட்ட நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், சீரியல் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கயல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த வானத்தை போல சீரியல் இந்த பாரம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த சீரியல் தற்போது துளசியின் வாழ்க்கையை காப்பாற்ற அவரது அண்ணன் சின்ராசு போடும் நிகழ்வு காரணமாக விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் சன்டிவியில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. குறும்புக்கார கிராமத்து பெண் உறுதியான துணிச்சலுடன் எடுக்கும் அதிரடி முடிவுகள் குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாரிமுத்து மறைவுக்கு பிறகு டி.ஆர்.பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை பெறாத வகையில் அதிக டி.ஆர்.பி புள்ளிகள் பெற்ற சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

பெண் மாவட்ட ஆட்சியரின் பின்னணியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள சுந்தரி சீரியலுக்கு இந்த வாரம் 5-வது இடம் கிடைத்துள்ளது. 6-வது இடத்தில், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, 7-வது இடத்தில் சன்டிவியின் ஆனந்த ராகம், 8-வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, 9-வது இடத்தில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம், 10-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் இடம் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment