scorecardresearch

விஜய் டி.வி-க்கு வரும் முன்பே இவங்க பப்ளி கேர்ள்..! கொஞ்சம் உற்றுப் பார்த்தா யாருன்னு கண்டு புடிச்சிருவீங்க!

ஜீ தமிழின் தி சிர்ப்பி கேர்ள் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்

Priyanka Deshpande
பிரியங்கா தேஷ்பாண்டே

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியின் தற்போது இருக்கும் பெண் விஜே பிரியங்கா. கலகலப்பான சிரிப்புடன் நிகழ்ச்சியை தொகுத்து வழக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் விஜய் டிவியில் தற்போது இருக்கும் ஒரே பெண் தொகுப்பாளினி இவர்தான் என்பது கூடுதல் சிறப்பு.

ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, விஜய் டிவிக்கு வரும் முன்பே பப்ளி கேர்ளாக இருந்துள்ளார்.

ஜீ தமிழின் தி சிர்ப்பி கேர்ள் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அதனைத் தொடர்ந்து அழகிய பெண்ணே, இசை அன்ப்ளக்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், சன்டிவியின் சூரிய வணக்கம் நிகழ்சி்சியை தொகுத்து வழங்கியது. அதன்பிறகு சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு வந்தார்.

இவர் விஜய் டிவியின் சினிமா காரம் காபி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ் சின்னத்திரையின் பிரபலமான நட்சத்திரமாக வலம் வந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தான் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பே வெளியிட்ட பிளாக் அன்ட் வொயிட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil television star vj publi girl photos viral on scoail media