ஏற்கனவே 18; புதுசா 2: சன் டி.வி-யில் மொத்தம் இத்தனை சீரியல்களா?

தொடக்கத்தில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த சேனலில் தற்போது நாள் முழுவதும் சீரியல் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.

தொடக்கத்தில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த சேனலில் தற்போது நாள் முழுவதும் சீரியல் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Suntv serials

அனாமிகா - புதுவசந்தம்

தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருந்து வரும் சன் டிவியில் ஏற்னவே 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில்,தற்போது புதிதாக 2 சீரியல்கள் களமிறங்க உள்ளது. இதன் மூலம் சன்டிவி சீரியல் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன்டிவிக்கு தனி இடம் உண்டு. இந்த தொடக்கத்தில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த சேனலில் தற்போது நாள் முழுவதும் சீரியல் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை சன் டிவி ரசிகர்களுக்கு சீரியல் தான் பொழுதுபோக்கு.

இடையில் செய்திகள் ஒரு சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு சீரியல் முடிவுக்கு வந்தாலும் உடனடியாக அடுத்து சீரியலுக்கு தயாராகி விடுவார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவியில் புது வசந்தம், அனாமிகா என 2 புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இரண்டு சீரியல்களில் ப்ரமோகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில், அனாமிகா சீரியல் ஒரு திரில்லர்/திகில்/இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  தர்ஷக் கவுடா, அக்ஷதா தேஷ்பாண்டே, ஆகாஷ் பிரேம் குமார் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அதேபோல் மற்றொரு புதுவரவான புது வசந்தம் சீரியலில் சோனியா சுரேஷ், சிவகவிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த இரண்டு சீரியல்களும் ஒளிபரப்பும் நாள், மற்றும் நேரம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சன் டிவியில் ஏற்கனவே ஆனந்த ராகம், அன்பே வா, அருவி, எதிர்நீச்சல், இலக்கியா, இனியா, கயல், மகராசி, மலர், பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி, சுந்தரி, தாலாட்டு, திருமகள் உள்ளிட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: