சினிமாவை விட சின்னத்திரைக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், ரியாலிட்டி ஷோ மற்றும் படங்களை விட ரசிகர்கள் அதிகம் சீரியலுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக பல சேனல்கள் சீரியலுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், ஒரு சீரியல் முடிந்தால் உடனடியாக அடுத்த சீரியல் தொடங்குவதும் வழக்கமான இருந்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சின்னத்திரையில் புது நடிகைகளும் என்டரி ஆகி வருகின்றனர்.
இதில் மக்கள் பெரும்பாலும் சன்டிவி சீரியலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வரும் சன்டிவியின்’ சீரியல் நடிகைகளுக்கும் வரவேற்பு அதிகம் இருந்து வருகிறது. இப்படி முக்கியத்துவம் பெறும் நடிகைகள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
நாயகி சீரியலில் நாயகியின் தோழியாக நடித்து பிரபலமான நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியலில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். கயல் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு ஒரு எபிசோட்டுக்கு ரூ10,000 சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் டிக்டாக் மூலம் பிரபலமாகி சன்டிவியின் சுந்தரி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை வென்றவர் கேப்ரியல்ல செல்லஸ்.
ரசிகர்கள் மத்தியில் சுந்தரி சீரியல் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த சீரியலின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக நடிகை கேப்ரியல்லாவுக்கு ரூ12,000 சம்பளம் வழங்கப்படுகிறது. விஜய் டிவியின் ராஜா ராணி மற்றும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆலியா மானசா கர்ப்பம் காரணமாக ராஜா ராணி சீசன் 2-ல் இருந்து விலகினார்.
பிரசவத்திற்கு பின் சன் டிவிக்கு தாவிய அவர், தற்போது இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவரது சம்பளம் ரூ20,000 என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியலில் நெகடீவ் ரோலில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் தான் இந்த சீரியலின் நாயகன்.
இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் கயல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலுக்காக சைத்ரா ரெட்டிக்கு, ரூ20,000 சம்பளம் வழங்கப்படுகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதாவுக்கு ரூ20,000 சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“