Tamil VJ Manimegalai Update : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியான வலம் வருபவர் விஜே மணிமேகலை. சன்மியூசிக்கில் சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது முதல் தொகுப்பாளினி பணியை தொடங்கிய இவர், அதன்பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சுறுசுறுப்பான பேச்சு மற்றும் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் என குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பரபலமானார்.
மணிமேகலைக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவான நிலையில், சில வருடங்களுக்கு முன்பு உசேன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்பர்ப்பு தெரிவித்ததால், வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இதன் காரணமாக இருவரது வீட்டிலும் இவர்களை சேர்த்துக்கொள்ளாத நிலையில்,தனியாக வசித்து வந்தனர்.
இதனிடையே திருமணத்திற்கு பின் சின்னத்திரையில்இருந்து மணிமேகலை சற்று ஒதுங்கியிருந்தார். அதன்பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்து இவர் தற்போது விஜய் டிவியிலேயே ஐக்கியமாகிவிட்டார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களை அவர்களது குடும்பத்தினர் சேர்த்துக்கொண்டனர்.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்று வரும் மணிமேகலை தொகுப்பாளினியாக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ள அவர், தனது கல்லூரியின் முதல் ஆண்டில் விஜேவாக முதல் ஷோவை தொகுத்து வழங்கியதாகவும், இதுவரை 2400-க்கும் அதிகமான ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் 2000-க்கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகளையும். 120-க்கும் மேற்பட்ட பிரபலங்களையும் பேட்டி கண்டுள்ள மணிமேகலை 100-க்கு மேற்ப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள், மற்றும் குழுவினருடன் சேர்ந்து 250-க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 12 ஆண்டுள் நிறைவு செய்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் இருந்து ஒதுங்கிய மணிமேகலைக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரீ- என்ட்ரியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின்போதே தனக்கு தொகுப்பாளினி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்த மணிமேகலைக்கு சமீபத்தில் தொடங்கப்பட்டமிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக வாய்ப்பு வழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.