OTT: தமிழில் 3, தெலுங்கில் 5... ஓ.டி.டி-யில் இந்த வார ரிலீஸ்; மிஸ் பண்ணாதீங்க மக்களே!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மற்றும் ரசிகர்களிடையே கவனம் பெற்ற சில முக்கியமான திரைப்படங்கள் தற்போது பிரபல ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மற்றும் ரசிகர்களிடையே கவனம் பெற்ற சில முக்கியமான திரைப்படங்கள் தற்போது பிரபல ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
download (16)

சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியாய்ப் பார்வையாளர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற பல திரைப்படங்கள், தற்போது வீட்டு பார்வையாளர்களுக்காக பிரபலமான ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.

Advertisment

திரையில் காண தவறிய ரசிகர்கள் இப்போது தங்கள் வசதிக்கேற்ப வீட்டிலிருந்தபடியே இந்த படங்களை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த ஓடிடி வெளியீடுகள் எவை? எந்தெந்த தளங்களில் கிடைக்கின்றன? என்பதைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்

உறவுகளின் பின்னணியில் உருவான 'தலைவன் தலைவி' திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் பல மொழிகளில் வெளியாகி, குடும்ப பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேசமயம், ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான சைக்காலஜிக்கல் திகில் படம் 'மாரீசன்', நெட்டபிலிக்ஸ் மற்றும் சிம்ப்லி சௌத் தளங்களில் வெளியாகி, ஓடிடி தளத்தில் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

Advertisment
Advertisements

மேலும், உணர்ச்சி மிக்க குடும்பக் கதையாக அமைந்த 'பேரன்பும் பேருங்கொபமும்' படம் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகி, பாராட்டுகளை பெற்றுவருகிறது.

தெலுங்கு

தெலுங்கில் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள திரைப்படங்களில், பவன்கல்யாண் நடித்த வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய 'ஹரி ஹர வீர மல்லு' படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல், எளிய கிராமத்து காதலை சொல்லும் 'கோத்தபல்லிலோ ஓக்கப்புடு' ஆஹா வீடியோவில், மர்மம் மற்றும் திருப்பங்களை உள்ளடக்கிய 'சூத்ரவாக்யம்' மற்றும் மென்மையான காதல் கதையான 'பிரேமா கதா' ஆகிய இரண்டும் ஈ டி வி வின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றுடன், நகைச்சுவையை மையமாகக் கொண்ட 'விர்ஜின் பாய்ஸ்' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி, இளம் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.

மலையாளம்

சமீபத்தில் பிரபல ஓடிடி தளங்களில் வெளியான மலையாள திரைப்படங்களில், மர்மமும் திரில்லருமாக வெளிவந்த 'சூத்ரவாக்யம்' அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் லயன்ஸ் கேட் பிளே தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

சமூக பிரச்சனைகளை விளக்கும் 'பெருமணி' சைனா பிளே-இல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் மற்றும் சமூக அம்சங்களை இணைத்துள்ள 'தீரன்' படம் சன் நெக்ஸ்டில் கிடைக்கிறது.

அதேபோல், உணர்வுப்பூர்வ கதையம்சம் கொண்ட 'சாந்தமீ ராத்திரியில்' படம் மனோரமா மாக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த நான்கு படங்களும் வித்தியாசமான கதைக்களங்களுடன், வீட்டு பார்வையாளர்களுக்கான சிறந்த தேர்வுகளாக உள்ளன.

கன்னடா

கன்னடத்தில் சமீபமாக ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள 'சஞ்சு வெட்ஸ் கீதா 2' மற்றும் 'கபட நாடக சூத்ரதாரி' ஆகிய திரைப்படங்கள், ஒவ்வொன்றும் தனித்துவமான கதைகளுடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன.

முன்னதாக வெளியான சென்சிஷனல் காதல் கதையின் தொடராக அமைந்த 'சஞ்சு வெட்ஸ் கீதா 2' தற்போது அமேசான் ப்ரைமில், உணர்வுப்பூர்வமான கதைநடையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல், மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த 'கபட நாடக சூத்ரதாரி' திரைப்படம் சன் நெக்ஸ்டில் வெளியானது. இரண்டும் கன்னட சினிமாவின் தரமான கதை சொல்லல் திறனை வெளிப்படுத்தும் படைப்புகளாகும்.

ஹிந்தி

சமீபத்தில் ஹிந்தி சினிமாவில் வெளியாகிய 'மா' மற்றும் 'மாலிக்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பிரபல ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன.

தாயின் அன்பையும் தியாகத்தையும் மையமாகக் கொண்ட 'மா' திரைப்படம் தற்போது நெட்டபிலிஸ்-இல், சமூக அரசியல் கருத்துகளை ஆழமாக பேசும் 'மாலிக்' திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ-வில் ஹிந்தியில் வெளியாகியுள்ளன.

ஒரு பக்கம் உணர்ச்சி பூர்வமான குடும்பக் கதையை கொண்ட படம், மற்றொரு பக்கம் சமூகத்தைக் கலையாய்வாக பார்க்கும் படம் என இரண்டும் பார்வையாளர்களுக்கு தனித்த அனுபவங்களை வழங்குகின்றன.

ஆங்கிலம்

சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியான பல முக்கியமான திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் பிரபல ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன. 'மிஷன் இம்பொசிபிள்: தி பைனல் ரெகோனிங்', 'F1 தி மூவீ', 'எளியோ', 'பாமிலியார் டச்', 'ஹவுஸ் ஆன் ஈடன்', 'தி பேட் கைஸ்' போன்ற படங்கள் அமேசான் ப்ரைம் வீடியோ -வில் வாடகைக்கு கிடைக்கின்றன. 

அதேபோல், 'தி மேப் தட் லீட்ஸ் டு யு' மற்றும் 'தி ஆல்டோ நயிட்ஸ்' போன்றவை காதலையும் மர்மத்தையும் மையமாகக் கொண்டுள்ளன.

'பீஸ் மேக்கர் சீசன் '2 மற்றும் 'ஏலியன்: எர்த்' போன்ற தொடர்கள் ஜ்யோசினிமா /ஹாட்ஸ்டார்-இல் வெளியாகியுள்ளன.

காதல், இசை, திரில்லர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் அனிமேஷன் கலந்த 'பால் போர் மீ', 'ஒன்னு ஹிட் ஒண்டெர்', 'ஒன் ஸ்விப்ட் ஓர்செஸ்', 'தி கில்லர்' போன்ற படங்கள் நெட்டபிலிஸ் -இல் ஸ்ட்ரீமிங் ஆகின்றன.

'ஹாட் மில்க்' திரைப்படம் முபி-இல், 'நைட் ஆப் தி  ஸ்ஊபொக்காலிப்ஸ்' திரைப்படம் பீகொக் தளத்தில் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் ரசிகர்கள் வீட்டு வசதியில் இந்த விருப்பமான திரைப்படங்களை அனுபவிக்கலாம்.

இந்த அனைத்து படங்களும் மற்றும் தொடர்களும் தற்போது நேரடி ரிலீசாக உங்கள் வீட்டு திரையில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன.

வேகமான ஆக்‌ஷன், ஆழமான காதல், சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர், சயின்ஸ் ஃபிக்ஷன் என உங்கள் மனநிலைக்கு ஏற்ற வகையில் திரைப்படங்களை தேர்வு செய்து, ஒரு நல்ல அனுபவத்தை வீட்டிலேயே பெறுங்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: