பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தனது குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
Advertisment
விஜய் டி.வி.யின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது வழக்கத்திற்கு மாறாக நிறைய புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பங்கேற்ற டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து முதல் நாளில் இருந்தே தன் வீட்டில் இருப்பது போன்று நடந்துகொண்டு அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். ஆனாலும் வழக்கமான் கலவரங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி கொண்டுதான் இருந்தது. இதனிடையே ஜி.பி முத்துவை போன்று டிக்டாக் பிரபலமாக உள்ளே வந்த தனலட்சுமிக்கும் ஜி.பி.முத்துவுக்கும் முதல் நாளில் இருந்தே மோதல் தொடங்கியது.
இதில் சக போட்டியாளர்கள் அனைவரும் ஜி.பி.முத்துவுக்கே தங்களது ஆதரவை தெரிவித்தனர். மோதல் இருந்தாலும் தன் வீடு மாதிரி நினைத்துக்கொண்டு சக போட்டியாளர்களை மகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்த ஜி.பி.முத்து நேற்று திடீரென தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். கடந்த சில தினங்களாக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகிறார் என்று தகவல் வெளியானது.
Advertisment
Advertisements
இந்த தகவல் உண்மையில்லை வதந்தி என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினாலும், அவருக்கான ஆதரவும் பெருகி வருகிறது.
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்து தனது முதல் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். வீட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அவர், தனது குழந்தைகளை கொஞ்சி மகிழ்கிறார். மேலும் தான் இல்லாமல் குழந்தைகள் ஏங்கிப்போய்விட்டதாகவும் உடல நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வரும் நிலையில், கவலைப்படாதீங்க தலைவா உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“