Advertisment

டாப் 10 சீரியல்கள்: முதல் 5 இடங்களைப் பிடித்த சன் டிவி தொடர்கள்... மேலே வந்த விஜய் டிவி சீரியல்

Top 10 Serials: தமிழ் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில், 52வது வாரத்துகான டாப் 10 சீரியல்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
top 10 serials

டாப் 10 சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Top 10 Tamil TV Serials: தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில், 52வது வாரத்துகான டாப் 10 சீரியல்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், முதல் 5 இடங்களைப் பிடித்து சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி மெல்ல மேலே வந்துள்ளது.

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற முன்னணி டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் 52வது வாரத்தில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் டாப் 10 சீரியல்களில் முதல் 5 இடங்களைப் பிடித்து சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டி.ஆர்.பி-யில் சரிவைச் சந்தித்திருக்கிறது. சீரியல்கள் யாரும் எதிர்பாராத வகையில், மேலே வந்துள்ளன. 

எதிர்நீச்சல், சுந்தரி, ஆனந்த ராகம் சீரியல் போன்ற சில சீரியல்கள் டி.ஆர்.பி-யில் கோட்டை விட்டிருக்கிறது.

Singa Penne

1, சிங்கப் பெண்ணே 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.44 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

kayal

2, கயல் 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் 2-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த முறை 10.52 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது

3, வானத்தைப்போல 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த முறை 9.80 புள்ளிகளை பெற்று 3வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

 

4, எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் 8.75 புள்ளிகளை பெற்று தொடர்ந்து 4-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

5, சுந்தரி 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 3வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.65 புள்ளிகளை பெற்று 5வது இடத்துக்கு சரிந்துள்ளது.

Siragadikka Aasai

6, சிறகடிக்க ஆசை 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.27 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. 

7, இனியா 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 6-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.94 புள்ளிகளை பெற்று இந்த முறை 7வது இடத்துக்கு குறைந்துள்ளது.

baakiyalakshmi

8, பாக்கியலட்சுமி 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் கடந்த வாரத்தில் 9-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.57 புள்ளிகளை பெற்று இந்த முறை 8-வது இடம் பிடித்து ஒரு படி மேலே வந்துள்ளது.

9, ஆஹா கல்யாணம் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரம் 10-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில், இந்த முறை 7.10 புள்ளிகளை பெற்று 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

10, ஆனந்த ராகம் 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 7-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.33 புள்ளிகளை பெற்று அதே 10-வது இடத்தில் தொடர்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serials
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment