scorecardresearch

விதி மீறலில் சிக்கிய கார்: நடிகர் விஜய்க்கு போலீஸ் அபராதம்

சென்னை பனையூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நடிகர் விஜய் தனது காரில் வந்துள்ளார்.

Madras HC relief to actor Vijay in Tax evasion case
நடிகர் விஜய்

கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறி நடிகர் விஜய் காருக்கு ரூ 500 அபாரதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், சரத்குமார் பிரகாஷ்ராஜ், குஷ்பு யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார். வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வாரிசு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் இறுதிக்கட்ட பணிகள் திவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை பனையூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நடிகர் விஜய் தனது காரில் வந்துள்ளார். அப்போது அந்த காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார், கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாக கூறி மோட்டார் வாகன சட்டப்படி ரூ 500 அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil traffic police fine to actor vijay car sticker issue