Advertisment

விஜய் மாஸ் வீடியோ... சரியான நேரத்தில் தரமான வேலை : பிக்பாஸ் பிரபலத்திற்கு விஜய் ரசிகர்கள் பாராட்டு

விஜயின் தீவிர ரசிகரான இவர், அவ்வப்போது பிகில் படத்தில் வரம் கப்பு முக்கியம் பிகிலு என்ற வசனத்தை பிக்பாஸ் வீட்டில் பலமுறை பயன்படுத்தியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Saravana Vikram

சரவண விக்ரம் - விஜய்

பிரபல சீரியல் நடிகரும், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான சரவண விக்ரம் தற்போது தளபதி விஜய் குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் சரவண விக்ரம். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த அவர், சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் கடுமையான ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், இறுதியில் தான் தான் பிக்பாஸ் டைட்டில் வி்னனர் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தார்.

இவரை பற்றி விமர்சனங்கள் அதிகம் வர இதுவே முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல் தளபதி விஜயின் தீவிர ரசிகரான இவர், அவ்வப்போர் பிகில் படத்தில் வரம் கப்பு முக்கியம் பிகிலு என்ற வசனத்தை பிக்பாஸ் வீட்டில் பலமுறை பயன்படுத்தியிருந்தார். ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களுக்கு மேலாக இருந்த இவரால், வின்னர் ஆக முடிவில்லை என்றாலும், இறுதிக்கட்டத்தில் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தற்போது தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொண்டு விரைவில், முழுநேர அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். விஜயின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜயின் கோட் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் ஆராவரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயின் தீவிர ரசிகரான சரவண விக்ரம், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கியபோதும், லியோ படத்தின் வெற்றி விழாவிலும் விஜய் பேசிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment