New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Pavithra-Lakshmi.jpg)
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி
குக் வித் கோமாளி இவருக்கு நல்ல அறிமுகத்தையும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பையும் கொடுத்தது. மேலும் சினிமாவிலும் வாய்ப்பை பெற்று கொடுத்தது.
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி நாய் சேகர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பவித்ரா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.
மாடலிங் செய்து வந்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் பவித்ரா லட்சுமி.
கோமாளியாக வந்த புகழுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி வைல்டு கார் என்ட்ரி மூலம் மீண்டும் வந்து பைனலுக்கு முன்னறினார்.
குக் வித் கோமாளி இவருக்கு நல்ல அறிமுகத்தையும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பையும் கொடுத்தது. மேலும் சினிமாவிலும் வாய்ப்பை பெற்று கொடுத்தது.
அந்த வகையில் நடிகர் சதீஷ் நாயகனாக நடித்த நாய் சேகர் படத்தில், பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக இவர் எந்த பதிவுகளையும் வெளியிடாத நிலையில், ரசிகர்கள் பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள பவித்ரா லட்சுமி, தான் சிறிய விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளார். இதனால் அவர் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.