சன்டிவியின் சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்து புகழ் பெற்ற நடிகை ப்ரீத்தி சர்மா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழின் திருமணம் என்னும் சீரியல் மூலம் அறிமுகமானவர் ப்ரீத்தி சர்மா. அதனைத் தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்திருந்தார்.
இந்த சீரியல் ப்ரீத்தி சர்மாவுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. ஆனால் சில மாதங்களில் இந்த சீரியலில் இருந்து ராதிகா விலகினார். ஆனாலும் ப்ரீத்தி சர்மா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
உத்திரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்த ப்ரீத்தி ஷர்மா சிறுவயது முதலே குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். அங்கு தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
இவர் 12ம் வகுப்பு படிக்கும்போது ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அதன்பிறகு கல்லூரி படித்தபோது, பாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டுள்ளார்.
இந்த நேரத்தில்தான் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த ப்ரீத்தி சர்மா, போட்டோஷூட்டிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.
இதனால் சமூகவலைதளங்களில் விதவிதமாக புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து சீரியலில் அறிமுகமான ப்ரீத்தி சர்மா திருமணம் சீரியலில் நெகடீவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு தான் அவருக்கு சித்தி 2 வாய்ப்பு கிடைத்து. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ப்ரீத்தி சர்மா, பலரின் பாராட்டுக்களை பெற்றார். இந்த சீரியல் சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது சன்டிவியின் மலர் சீரியலில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“